குறிப்பு - இதன் தமிழாக்கம் இந்த பக்கத்தில் சற்று கீழே உள்ளது.
WA-005: Understanding Your Soil's "Bank Account" (What is CEC?)
In our last message, we learned that soil acts like a magnet that holds onto nutrients. Today, we are going to look at the actual sizing of that magnet. In agricultural science, this is called Cation Exchange Capacity, or CEC.
If that sounds like a complicated chemical term, don't worry. Think of CEC simply as your soil’s Bank Account Capacity.
Some people have a small wallet that can only hold a few hundred rupees, while others have a massive locker that can hold lakhs. Soil is exactly the same.
The Size of Your Wallet: Low CEC vs. High CEC
- Low CEC Soil (The Small Wallet): If your field has sandy soil (like the riverbed areas), your CEC number will be low (around 1 to 10). This means your soil has very few "magnet slots." It cannot hold onto nutrients for long. If you dump a lot of fertilizer here, the soil can't hold it, and the rain washes it away.
- High CEC Soil (The Big Locker): If your field has heavy black or clay soil (like parts of the Delta belt), your CEC number will be high (20 to 40+). This soil has massive holding capacity. It can store a huge amount of nutrients without letting them wash away.
Why CEC Matters for Soil Balancing
Remember Neil Kinsey's rule about the perfect balance (65% Calcium, 15% Magnesium, 3-5% Potassium, <1% Sodium)? Your CEC tells us exactly how many kilos of these minerals it takes to fill those percentages.
Think of it this way: To fill 65% of a small wallet (Low CEC/Sandy soil), you only need a little bit of Calcium. If you add too much, you overload it. To fill 65% of a huge locker (High CEC/Clay soil), you need a massive amount of Calcium just to move the needle.
If you apply the exact same amount of fertilizer to a sandy soil and a clay soil, one will get ruined by overload, and the other won't even notice the difference. This is why standard "one-size-fits-all" fertilizer recommendations fail.
Can You Change Your CEC?
If you have a low CEC sandy soil, can you increase your wallet size? Yes! By increasing your Soil Organic Matter and Humus.
Organic matter has a massive, naturally high CEC. Adding high-quality biological organic inputs to sandy soil is like upgrading your small wallet into a premium leather briefcase that holds ten times more nutrition and water.
The Takeaway
Knowing your CEC is like checking your bank balance before writing a cheque. It tells us exactly what your soil can handle, how much nutrition to give it, and how often.
Stop playing guessing games with your land. We can help you.
When you conduct a soil test through New ViVa Bio Nutrients, you can determine your soil's CEC level. Currently, in the vast majority of soil tests performed by farmers, this specific parameter is rarely reported. Even when it is mentioned, no guidance is provided regarding what actions should be taken based on this information. However, determining precisely what nutrients the soil requires must fundamentally be based on this very number.
We'll talk more.
Ravishankar Karuppiah New ViVa Bio Nutrients www.newviva.in 934 204 9144
WA-005: உங்க மண்ணோட "பேங்க் அக்கவுண்ட்" எவ்வளவு பெருசு? (CEC விளக்கம்)
கடந்த பதிவுல நம்ம மண் ஒரு காந்தம் மாதிரி வேலை செய்யுதுன்னு பார்த்தோம். இன்னைக்கு அந்த காந்தத்தோட "சைஸ்" என்னன்னு பார்க்கப்போறோம். இத விவசாய அறிவியல்ல CEC காட்-ஐயான் எக்ஸ்சேஞ்ச் கெபாசிட்டி (Cation Exchange Capacity) அப்படின்னு சொல்லுவாங்க.
இது ஏதோ பெரிய கெமிஸ்ட்ரி வார்த்தை மாதிரி தோணலாம், ஆனா சிம்பிளா சொல்லணும்னா இது உங்க மண்ணோட "ஊட்டச்சத்த பிடித்து வைத்துக் கொள்ளும் திறன்" அப்படின்னு புரிஞ்சிகிங்க.
நீங்க உழவர் சந்தைக்கு காய் வாங்க போறீங்க. இன்னைக்கு சமையலுக்கு காய் வாங்க நாம சின்ன பையா எடுத்துட்டு போவோம். அதுல கொஞ்சமாத்தான் காய்கறி வைக்க முடியும். அதிவே ஒரு கல்யாணத்துக்கு காய் வாங்கணும்னா ஒரு பெரிய சாக்குல தான் காய் வாங்கணும். உங்க மண்ணும் அதே மாதிரிதான்!
சின்ன பை VS பெரிய சாக்கு:
- குறைந்த CEC மண் (சின்ன பை): உங்க நிலம் மணல் பாங்கான மண்ணா இருந்தா (உதாரணமா, ஆற்றுப்படுகை ஓரங்கள்ல இருக்குற மாதிரி), அங்க CEC அளவு ரொம்ப கம்மியா (1லிருந்து 10 வரை) இருக்கும். இதுக்கு சத்துக்களை புடிச்சு வச்சுக்கிற சக்தி கம்மி. நீங்க அதிகமா உரம் போட்டா, அது மண்ணுல தங்காம தண்ணீர்ல கரைஞ்சு வீணா போயிடும்.
- அதிக CEC மண் (பெரிய சாக்கு): உங்க நிலம் நல்ல களிமண்ணாவோ அல்லது கரிசல் மண்ணா இருந்தா (டெல்டா பகுதிகள்ல இருக்குற மாதிரி), அங்க CEC அளவு அதிகமா (20லிருந்து 40க்கு மேல) இருக்கும். இந்த மண்ணுக்கு சத்துக்களை சேமிச்சு வச்சுக்கிற லாக்கர் வசதி ரொம்ப பெருசு.
மண் சமநிலைக்கு (Soil Balancing) CEC ஏன் முக்கியம்?
நம்ம போன தடவை பார்த்தோம் இல்லையா—மண்ணுல 65% கால்சியம், 15% மெக்னீசியம், 3-5% பொட்டாசியம், <1% சோடியம் இருக்கணும்னு நெய்ல் கின்சி சொன்ன விதி. உங்க CEC அளவு தெரிஞ்சாதான், அந்த சதவீதத்தை நிரப்ப எத்தனை கிலோ இடுபொருட்கள் போடணும்னு கணக்கு போட முடியும்.
- ஒரு சின்ன பையோட (மணல் மண்) 65% இடத்தை நிரப்ப கொஞ்சமே கொஞ்சம் கால்சியம் போதும். அதிகமா போட்டா பை கிழிஞ்சிடும் (மண் கெட்டுடும்).
- அதே ஒரு பெரிய சாக்கோட களிமண்) 65% இடத்தை நிரப்ப, நீங்க மூட்டை மூட்டையா கால்சியம் குடுத்தா தான் அந்த இடமே நிறையும்.
மணல் நிலத்துக்கும், களிமண் நிலத்துக்கும் ஒரே அளவா உரம் வைக்கக் கூடாதுன்னு சொல்றதுக்கு இதுதான் காரணம்.
மண்ணோட பை சைஸை கூட்ட முடியுமா?
"என் நிலம் மணல் மண்ணா இருக்கு, இதோட CEC அளவை கூட்ட முடியுமா?" அப்படின்னு கேட்டா... கண்டிப்பா முடியும்! அதுக்குத்தான் மண்ணோட மட்கும் தன்மையை (Organic Matter/Humus) கூட்டணும்.
இயற்கை மட்குகளுக்கு (Humus) காந்த சக்தி ரொம்ப அதிகம். மணல் நிலத்துல தரமான உயிர் இடுபொருட்களை (Bio-inputs) தொடர்ந்து பயன்படுத்தும் போது, அது உங்க சின்ன பையை, ஒரு பெரிய சாக்கா மாத்திடும். அதுக்கப்புறம் அது நிறைய தண்ணீரையும், சத்தையும் சேமிக்க ஆரம்பிக்கும். (அதுக்காக ரொம்ப மக்கு எரு போட்டீங்கன்னா, பொட்டாசியம் அதிகமாகி - களை பிரச்சனை ஜாஸ்தி ஆயிடும். முடிஞ்ச வரை புரிஞ்சு பண்றது உத்தமம்)
நாம புரிஞ்சுக்க வேண்டிய விஷயம்:
CEC-ன்றது உங்க மண்ணோட பேங்க் பேலன்ஸ் மாதிரி. அதைத் தெரிஞ்சுக்கிட்டு நாம விவசாயம் செஞ்சா, காசும் வீணாகாது, போடுற உரமும் வீணாகாது.
நியூ விவா பயோ நூட்டரீண்ட்ஸ் (New ViVa Bio Nutrients) மூலமா நீங்க மண் பரிசோதனை பண்ணும் போது உங்கள் மண்ணின் CEC அளவை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இதை இன்றைக்கு விவசாயிகள் பண்ற பெரும்பாலான மண் பரிசோதனையிலே யாரும் சொல்றதுதில்ல. சொன்னாலும், இத வச்சு அவங்க என்ன பண்ணணும்னு சொல்றதகில்ல. ஆனா மண்ணுக்கு முதல்ல என்ன கொடுக்கணும்ணு நாம முடிவு பண்ண வேண்டியது இந்த நம்பரை வச்சு தான்.
இன்னும் பேசுவோம்.
ரவிசங்கர் கருப்பையா New ViVa Bio Nutrients www.newviva.in 934 204 9144



