science-deep-dives

WA-006: The Weed Secret — Why Your Soil is "Choosing" to Grow Weeds

Ravishankar Karuppiah
May 25, 2026

Understanding Weeds

WA-006: The Weed Secret — Why Your Soil is "Choosing" to Grow Weeds

குறிப்பு - இதன் தமிழாக்கம் இந்த பக்கத்தில் சற்று கீழே உள்ளது.

WA-006: The Weed Secret — Why Your Soil is "Choosing" to Grow Weeds

Let’s be completely honest. Why do 99% of farmers refuse to leave chemical farming? It isn't because they love buying expensive poisons. It’s because of two massive practical fears: Uncontrolled weeds ruining their field, and Nitrogen drop crashing their yield.

The organic movement loves to talk about "good vs. bad" or "natural vs. chemical." But a farmer can't feed their family on ideology. If a farming method cannot guarantee a steady income, clean weed control, and heavy yields, no sane farmer will adopt it.

Today, let’s use real soil science to solve the first big nightmare: Weeds.

What is a Weed, Really?

The legendary soil scientist Dr. William A. Albrecht said it best:

"Weeds are plants growing on soils too low in fertility for other kinds of plant growth."

In plain English, weeds are nature's unpaid mineral collectors. They only show up when your soil is broken, deficient, or completely out of balance.

Look at it from two different angles:

  • The Farmer’s View: Weeds are annoying thieves stealing water and fertilizer from my main crop. They must be destroyed!
  • Nature’s View: This soil is sick and compacted. Let me send these tough weeds to mine minerals from deep below, break up the hard earth, and heal the land.

A weed is simply a plant that the soil thinks ought to grow, while the farmer thinks it ought to be removed. To control weeds without spending a fortune on labor or weedicides, you have to understand why your soil is begging for them.

The Chemical Trap: The Urea Cycle

If your field is being choked by aggressive grass weeds, blame your Urea bag.

Urea is a powerful nitrogen salt. When you dump it into the soil, it converts into nitrate nitrogen and grabs onto your soil's Calcium, forming Calcium Nitrate. This compound is highly unstable—as soon as it rains or you irrigate, it washes away deep into the earth, stealing your valuable Calcium along with it.

When Calcium drops, Magnesium takes over. Combined with heavy plowing and the harsh heat generated by chemical salts, your soil turns into Hardpan—a tight, suffocating layer like a concrete slab underground.

Nature’s Response: Nature hates hardpan. So it sends grass weeds with fierce, needle-like roots to pierce right through that concrete layer and break it up. If you have a massive grass weed problem, your soil is screaming: "Stop dumping salt fertilizers! My minerals are totally out of balance!"

The Organic Trap: The Potassium Overload

"Fine, I’ll stop chemicals and dump tons of organic compost and cattle manure instead!"

Wait. This is where well-meaning organic farmers trip up. Traditional farmyard manure and compost are incredibly rich in Potassium. When you blindly apply loads of it without a soil test, Potassium skyrockets.

Guess what happens when Potassium gets too high? It crowds out Calcium. The soil balance breaks down again, and—you guessed it—Nature triggers the alarm and floods your field with weeds to fix the imbalance.

The Takeaway

You cannot spray or pull your way out of a weed problem long-term. Weeds are a symptom of a nutritional imbalance. Whether you are overloading on chemical Urea or organic manure, if your Calcium-to-Magnesium-to-Potassium ratios are broken, the weeds will win.

The science to fix this exists. By balancing the minerals in the soil based on your unique CEC, we make the soil perfect for your cash crop—and completely unlivable for weeds. Stop fighting nature; let’s change the soil instead.

This is why at New ViVa Bio Nutrients, we always start with proper, scientific soil testing. This is how farming should be done. This is the clear future of agriculture.

Ravishankar Karuppiah New ViVa Bio Nutrients www.newviva.in 934 204 9144


WA-006: களைகளின் ரகசியம் — உங்க நிலத்துல ஏன் களைகள் முளைக்குதுனு தெரியுமா?

99% விவசாயிகள் ஏன் ரசாயன விவசாயத்தை விட்டு வெளியே வர பயப்பட்றாங்க? அவங்களுக்கு ரசாயன மருந்து வாங்க ரொம்ப ஆசைன்னு இல்ல. அதுக்கு பின்னாடி ரெண்டு நியாயமான பயம் இருக்கு: ஒன்று, கட்டுப்படுத்த முடியாத களைகள் (Weeds); ரெண்டு, நைட்ரஜன் சத்து குறைஞ்சு மகசூல் அடியோட சரிஞ்சுடுமோன்ற கவலை;

இயற்கை விவசாயம் பேசுறவங்க பெரும்பாலும் "ரசாயனம் கெட்டது, இயற்கை நல்லது"னு சொல்லுவாங்க. ஆனா, அதை பண்ற விவசாயியின் வாழ்வாதாரத்துக்கு, அது சரியான்னு சொல்ல மாட்டாங்க. ஒரு விவசாய முறை நல்ல வருமானத்தையும், சுலபமான களை கட்டுப்பாட்டையும், சிறந்த மகசூலையும் கொடுக்கலனா, எந்த ஒரு விவசாயியும் அதை ஏத்துக்க மாட்டார். அதனால தான் இயற்கை விவசாயம் இன்னும் பெயரளவில் இருக்கு. நெல்லை தாண்டி அது பெயரளவுக்கு கூட இல்ல அப்டின்றது தான் கசப்பான உண்மை.

இன்னைக்கு, விஞ்ஞானப்பூர்வமா நம்மோட முதல் பெரிய தலைவலியான "களைகளை" எப்படி தீர்க்குறதுனு பார்ப்போம்.

நிஜமாவே 'களை' அப்படின்னா என்ன?

உலகப் புகழ்பெற்ற மண் விஞ்ஞானி டாக்டர் வில்லியம் ஆல்பிரெக்ட் ஒரு விளக்கம் குடுத்திருக்கார்:

"உங்க முக்கிய பயிர்கள் வளர்றதுக்கு தேவையான ஊட்டச்சத்து இல்லாத பலவீனமான மண்ணுலதான் களைகள் முளைக்கும்."

இன்னும் சுருக்கமா சொன்னா, களைகள்ன்றது பூமிக்கு அடியில இருக்குற சத்துக்களைத் தோண்டி எடுக்குற "இலவச தொழிலாளிகள்". உங்க மண்ணோட சத்துக்களோட விகிதம் எப்போ தப்பாகுதோ, அப்பதான் களைகள் வரும்.

இதை ரெண்டு பக்கத்துல இருந்து பாருங்க:

  • விவசாயியின் பார்வை: களைகள் என் பயிருக்கு வைக்கிற உரத்தையும் தண்ணியையும் திருடுற திருடர்கள். இதை உடனே அழிக்கணும்!
  • இயற்கையின் பார்வை: இந்த மண் ரொம்ப இருக்கமாவும் சத்து இல்லாமலும் கிடக்கு. அதான் ஆழமான வேர் இருக்குற களைகளை அனுப்பி, மண்ணைத் தளர்த்தி, சத்துக்களை மேலே கொண்டு வந்து பூமியைக் குணப்படுத்துறேன்.

மண் எந்தச் செடியை வளர்க்கணும்னு நினைக்குதோ அது 'களை'; விவசாயி எந்தச் செடியை எடுக்கணும்னு நினைக்குறாரோ அது 'களை'. ஆள் கூலி இல்லாம, களைக்கொல்லி அடிக்காம இதைக் கட்டுப்படுத்தணும்னா, முதல்ல உங்க மண் ஏன் இந்த களைகளைக் கேக்குதுன்னு நீங்க புரிஞ்சுக்கணும்.

ரசாயன விவசாய வலை: யூரியா சுழற்சி (The Urea Cycle)

உங்க நிலத்துல அருகம்புல்லும் மத்த புல் வகைகளும் காட்டுத்தனமா மண்டிப் போயிருந்தா, அதுக்கு நீங்க போடுற யூரியா மூட்டைதான் பெரும் காரணம்!

யூரியான்றது ஒரு கடுமையான நைட்ரஜன் உப்பு. அதை நிலத்துல போடும்போது, அது மண்ணுல இருக்குற கால்சியத்தோட (Calcium) சேர்ந்து 'கால்சியம் நைட்ரேட்'டா மாறுது. இது தண்ணீரில் ரொம்ப வேகமா கரையக்கூடியது. நீங்க தண்ணி பாய்ச்சும் போதோ இல்ல மழை பெய்யும் போதோ, இது அப்படியே பூமிக்கு அடியில அடிச்சிட்டு போயிடும். அப்படிப் போகும்போது மண்ணுல இருக்குற நல்ல கால்சியத்தையும் அது கூடவே திருடிட்டு போயிடும்.

மண்ணுல கால்சியம் குறையும் போது, மெக்னீசியத்தோட (Magnesium) ஆதிக்கம் அதிகமாகிடும். இதோட நீங்க அடிக்கடி டிராக்டர் வச்சு உழும்போது, மண்ணுக்கு அடியில "ஹார்டுபேன்" (Hardpan) அப்படின்னு சொல்ற ஒரு பாறை போன்ற இருக்கமான அடுக்கு உருவாகிடும். சிமெண்ட் தரை மாதிரி இருக்குற அந்த அடுக்குக்குள்ள காற்றோட்டமோ, உயிரோட்டமோ இருக்காது.

இயற்கையின் பதில்: பூமிக்கு இந்த இருக்கமான தரை பிடிக்காது. உடனே அது கூர்மையான, மொரட்டு வேர்கள் இருக்குற புல் வகை களைகளை அனுப்பி, அந்த சிமெண்ட் பாறையை உடைக்கப் பார்க்கும். இது ஏன் அப்படின்னா கால்சியம் மண்ணுக்கு அடில போயிடும். அதை வேர் மூலமா எடுத்து மண்ணுக்கு மேல போடற வேலைய தான் இந்த களைகள் முக்கியமா செய்யுது. உங்க நிலத்துல புல் களைகள் அதிகமா இருந்தா, உங்க மண் கத்தி சொல்லுது: "தயவுசெஞ்சு ரசாயன உப்பை நிறுத்தங்க! என் மினரல் பேலன்ஸ் மொத்தமா கெட்டுப் போகுது!"

இயற்கை விவசாய வலை: பொட்டாசியம் ஓவர்லோடு

"சரிப்பா... நான் ரசாயனத்தை நிறுத்திட்டு, லோடு லோடா மாட்டுச் சாணத்தையும் கம்போஸ்ட்டையும் கொட்டுறேன்" அப்படின்னு நீங்க கிளம்புனா... அங்கதான் இயற்கை விவசாயிகளும் ஏமாறுறாங்க.

நம்ம போடுற தொழுவுரத்துல பொட்டாசியம் (Potassium) சத்து ரொம்ப அதிகமா இருக்கும். மண் பரிசோதனை செய்யாம, குத்துமதிப்பா டன் கணக்குல எருவை அள்ளிப் போடும்போது, மண்ணுல பொட்டாசியம் அளவு தாறுமாறா உயரும்.

பொட்டாசியம் அளவுக்கு அதிகமா போனா, அது மண்ணுல இருக்குற கொஞ்ச நஞ்ச கால்சியத்தையும் வேரை எடுக்க விடாம லாக் பண்ணிடும். (இத விவசாய அறிவியல்ல "ஊட்டச்சத்து முரண்பாடு" (Nutrient Antagonism) அப்படின்னு சொல்லுவாங்க). மறுபடியும் மண்ணோட பேலன்ஸ் தப்பாகுதா... உடனே இயற்கை அலாரத்தை ஆன் பண்ணி, அந்த சத்து குறைபாட்டை சரி செய்ய களைகளை முளைக்க வச்சிடும்!

நாம புரிஞ்சுக்க வேண்டிய விஷயம்:

களைக்கொல்லி அடிக்கிறதுனாலயோ இல்ல ஆள் வச்சு வெட்டுறதுனாலயோ களைகளை நிரந்தரமா ஒழிக்க முடியாது. களைகள்ன்றது மண்ணுக்குள்ள இருக்குற சத்து குறைபாட்டோட ஒரு அறிகுறி (Symptom). நீங்க யூரியா போட்டாலும் சரி, சாணம் போட்டாலும் சரி... மண்ணோட கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் விகிதம் தப்பா இருந்தா களைகள் வரத்தான் செய்யும்.

இதைச் சரி செய்யுற அறிவியல் ஏற்கனவே இருக்கு. உங்க மண்ணோட CEC அளவுக்கு ஏத்த மாதிரி மினரல்களை நாம பேலன்ஸ் செஞ்சுட்டா, மண் உங்க முக்கிய பயிருக்கு (மா, வாழை, தென்னைக்கு) சொர்க்கமாகவும், களைகளுக்கு நரகமாகவும் மாறிடும். களைகளோட சண்டை போடுறதை நிறுத்திட்டு, மண்ணோட பேலன்ஸை மாத்துவோம்!

இத படிச்சிட்டு உடனே இனி களைகளே வாராதுன்னு முடிவு பண்ணாதீங்க. களைகள் உங்க நல்ல விவசாயத்துக்கு ஒரு தொந்தரவா இருக்காதுன்னு புரிஞ்சிக்குங்க. படிப்படியா உங்க களை பிரச்சனை தீரும்.

இதனால தான் நியூ விவா பயோ நூட்ரீயண்ட்ஸ் (New ViVa Bio Nutrients)-ல நாங்க எப்போதும் சரியான, அறிவியல் பூர்வமான மண் பரிசோதனையில இருந்து தொடங்குறோம். இப்படித் தான் விவசாயம் பண்ணனும். இது தான் தெளிவான, நிறைவான விவசாயத்தின் எதிர்காலம்.

இன்னும் பேசுவோம்.

ரவிசங்கர் கருப்பையா New ViVa Bio Nutrients www.newviva.in 934 204 9144

எங்களின் முந்தைய கட்டுரைகளை படிக்க, www.newviva.in/blog என்ற இணைய முகவரியை தொடர்பு கொள்ளவும்.

எங்கள் வாட்ஸ்அப் குழுவில் இணைய, இங்கே அணுகவும் - https://chat.whatsapp.com/DtRfcPrnZykIfmavZU6kj0

முடிந்தவரை எல்லா விவசாயிகளுக்கும் பகிருங்கள். மீளுருவாக்க / ஊட்டச்சத்து விவசாயம் (Regenerative Agriculture) ஒன்று தான் விவசாயத்தின் எதிர்காலம். சரியான விளைச்சலில் இருந்து, ஊட்டச்சத்தில் இருந்து, கார்பன் கிரெடிட்ஸ்-ல் இருந்து - எல்லாவற்றிக்கும் ஒரு அடிதளமாக இந்த விவசாய முறை தான் இருக்கும்.

Share this article

Help others discover this content

Share on social media:

Article URL:

https://newviva.in/blog/the-weed-secret

More from science-deep-dives