science-deep-dives

WA-010: The Rhizosphere — The 24/7 Underground Restaurant Run by Your Roots

Ravishankar Karuppiah
May 31, 2026

Understanding Rhizosphere

WA-010: The Rhizosphere — The 24/7 Underground Restaurant Run by Your Roots

குறிப்பு - இதன் தமிழாக்கம் இந்த பக்கத்தில் சற்று கீழே உள்ளது.

எங்கள் வாட்ஸ்அப் குழுவில் இணைய (Join our WhatsApp group) - https://chat.whatsapp.com/DtRfcPrnZykIfmavZU6kj0

WA-010: The Rhizosphere — The 24/7 Underground Restaurant Run by Your Roots

In our last message, we looked at a real soil report and saw how a broken Carbon-to-Nitrogen (C:N) ratio can cause soil microbes to turn into thieves, stealing Nitrogen right from your crop’s roots.

But in a healthy, balanced soil, the relationship between plants and microbes isn't a war—it’s a highly sophisticated business transaction.

Look closely at the roots of your Mango trees, Bananas, or Coconuts. You might think they are just passive straws sucking up water and fertilizer. But science proves that your roots are actually running a highly competitive, 24/7 underground restaurant. This restaurant zone is called the Rhizosphere.


The Currency of the Underground: Root Exudates

Plants are master chefs of solar energy. Through photosynthesis, leaves capture sunlight and carbon dioxide to manufacture pure liquid sugars, carbohydrates, and proteins.

Here is the mind-blowing part: A healthy plant pumps up to 40% of this premium energy straight out of its roots and into the soil.

Why would a plant waste nearly half of its hard-earned food? It doesn't. In science, these juices are called Root Exudates. Think of them as pure cash. The plant releases this liquid sugar cake into the Rhizosphere to hire an army of local soil microbes.


The Deal: "I Bake the Bread, You Hunt the Minerals"

Plants can make sugars from the sun, but they cannot walk around to hunt for Zinc, Calcium, or Phosphorus locked deep inside the soil matrix. Microbes, however, are expert hunters.

When a plant needs Zinc (remember our triple lockout from last time?), it changes the recipe of its root exudates. It pumps out a specific liquid cake that attracts a specialized type of bacteria or fungi.

The microbes gather around the root zone, eat the free sugar cake, and in return, they use their specialized enzymes to dissolve the locked-up Zinc and feed it straight back to the root tip.

  • The plant provides the Energy (Carbon/Sugars).
  • The microbes provide the Nutrition (Minerals & Water).

This is why, in a truly regenerative ecosystem, you don't need to dump massive loads of chemical fertilizers. The plant naturally buys its own food using solar cash!


How We Accidentally Shut Down the Kitchen

What happens when a farmer dumps a heavy dose of synthetic, water-soluble chemical fertilizer (like Urea or DAP) directly onto the root zone?

The plant gets a sudden, artificial rush of lazy nutrition. It says, "Well, if I am getting this food for free from a chemical bag, why should I waste my energy baking sugar cakes for the microbes?"

The plant stops pumping root exudates.

The underground restaurant closes down. Starved of their daily sugar payments, the helpful soil bacteria and fungal networks die off. The soil structure collapses, turns hard, and the plant becomes completely addicted to the chemical bag. As soon as the chemical fertilizer washes away, the plant starves because its natural supply chain is dead.


The Takeaway

Regenerative agriculture is about keeping the underground kitchen open. By balancing your soil minerals and protecting the biology, we ensure your plants keep pumping liquid carbon down into the earth.

When your roots are rich in exudates, your soil stays loose, water retention doubles, and billions of microbes work for you for free, 24 hours a day.

That is precisely why, at New ViVa Bio Nutrients, we always prioritize crop health above all else. For if a crop is healthy, it naturally enriches the surrounding soil. Consequently, the crop yields a bountiful harvest. It is not merely the case that crops thrive only if the soil is first rectified; rather, if you simply cultivate your crops to be robust and healthy, the soil itself will become fertile very rapidly. This is how nature operates—and this is precisely how we ought to practice agriculture.

We'll talk more.

Ravishankar Karuppiah 934 204 9144

WA-010: ரைசோஸ்பியர் (Rhizosphere) — வேர்கள் நடத்தும் 24 மணி நேர அன்லிமிடெட் ஹோட்டல்!

கடந்த பதிவுல ஒரு உண்மையான மண் அறிக்கையை வச்சு, சிதைந்து போன கார்பன்-நைட்ரஜன் (C:N) விகிதத்தால மண்ணுல இருக்குற நுண்ணுயிர்கள் எப்படி பயிரோட சத்தைத் திருடுதுன்னு பார்த்தோம்.

ஆனா ஒரு ஆரோக்கியமான, சமநிலையான மண்ணுல, பயிர்களுக்கும் நுண்ணுயிர்களுக்கும் நடுவுல நடக்கிறது ஒரு போரோ அல்லது திருட்டோ இல்ல; அது ஒரு உலகத்தரம் வாய்ந்த பிசினஸ் டீல்!

உங்க மாமரம், வாழை அல்லது தென்னையோட வேர்களைக் கொஞ்சம் உத்துப்பாருங்க. அதுங்க சும்மா தண்ணீரையும் கடையில வாங்குற உப்பையும்தான் உறிஞ்சிட்டு இருக்குன்னு நினைச்சீங்களா? இல்லவே இல்லை! அறிவியல் முறைப்படி பார்த்தா, உங்க பயிரோட வேர்கள் பூமிக்கு அடியில ஒரு பிரம்மாண்டமான, 24 மணி நேர சொகுசு உணவகத்தையே நடத்திட்டு இருக்கு. இந்த வேர்ச் சூழல் பகுதிக்கு பேர்தான் ரைசோஸ்பியர் (Rhizosphere).


பூமிக்கு அடியில செல்லும் கரன்சி: வேர்ச் சுரப்புகள் (Root Exudates)

தாவரங்கள் எல்லாமே சூரிய ஒளியைச் சமைக்கிற மாஸ்டர் சமையல் நிபுணர்கள் (Chefs). இலைகள் சூரிய ஒளியையும் காத்துல இருக்குற கரியமில வாயுவையும் ($CO_2$) வச்சு, சுத்தமான திரவச் சர்க்கரை, கார்போஹைட்ரேட் மற்றும் புரோட்டீன்களைத் தயாரிக்குது.

இங்கதான் ஒரு ஆச்சரியமான விஷயம் நடக்குது: ஒரு ஆரோக்கியமான பயிர், தான் கஷ்டப்பட்டு தயாரிச்ச இந்த உன்னதமான எனர்ஜியில 40% வரை தன் வேர்கள் வழியா மண்ணுக்குள்ளேயே பம்ப் செய்து வெளியேத்துது!

ஏன் ஒரு செடி தான் கஷ்டப்பட்டு தயாரிச்ச உணவை வீணாக்கணும்? அது வீணாக்கல. அறிவியல்ல இந்தத் திரவச்சாற்றுக்கு வேர்ச் சுரப்புகள் (Root Exudates) என்று பெயர். சிம்பிளா சொன்னா இது பூமிக்கு அடியில செல்லுற 'பணப் பட்டுவாடா' (Solar Cash). இந்த இனிப்பு கேக்கை வேர்ச் சூழல்ல (Rhizosphere) இருக்குற நுண்ணுயிர்களுக்கு கூலியா குடுத்து, ஒரு பெரிய வேலைக்காரப் பட்டாளத்தையே வேர்கள் தனக்குக் கீழ வேலைக்கு வச்சிருக்கு.


அந்த ரகசிய ஒப்பந்தம்: "நான் சோறு போடுறேன்; நீ சத்தைக் கொண்டு வா!"

பயிர்களால சூரிய வெளிச்சத்துல இருந்து சர்க்கரையைச் சமைக்க முடியும், ஆனா அதால மண்ணுக்குள்ள நடந்து போயி, பாறையில லாக் ஆகிக் கிடக்குற ஜிங்க்கையோ, கால்சியத்தையோ, பாஸ்பரஸையோ தேடி எடுக்க முடியாது. ஆனா நுண்ணுயிர்கள் (Microbes) இதுல கில்லாடிகள்!

உதாரணமா, பயிருக்கு இப்போ "ஜிங்க்" (Zinc) சத்து வேணும்னு வச்சுப்போம். உடனே வேர் என்ன செய்யும் தெரியுமா? தான் வெளியேத்துற திரவத்தோட ரெசிபியை (Recipe) மாத்தும். ஜிங்க் சத்தை எடுக்கத் தெரிஞ்ச பாக்டீரியாக்களுக்குப் பிடிச்ச மாதிரி ஒரு ஸ்பெஷல் ஜூஸை வேர் வெளியே அனுப்பும்.

அந்த வாசனைக்கு ஓடி வர்ற நுண்ணுயிர்கள், வேர் குடுக்குற சர்க்கரை சாற்றைக் குடிச்சிட்டு, பதிலுக்கு மண்ணுல லாக் ஆகி கிடக்குற ஜிங்க் சத்தை தங்களோட என்சைம்கள் மூலமா கரைச்சு, அப்படியே வேரோட வாய்க்குள்ள ஊட்டிவிடும்.

  • பயிர் குடுப்பது: ஆற்றல் (சூரியச் சர்க்கரை / கார்பன்).
  • நுண்ணுயிர்கள் குடுப்பது: ஊட்டச்சத்து (மினரல்கள் மற்றும் தண்ணீர்).

அதனாலதான், முறையான மீளுருவாக்க / ஊட்டச்சத்து விவசாயத்துல (Regenerative Ag) நீங்க மூட்டை மூட்டையா கெமிக்கல் உரங்களைக் கொட்ட வேண்டிய அவசியமே இல்லை. பயிர் தன் சூரியப் பணத்தை வச்சு, தனக்குத் தேவையான சத்தை தானே விலைக்கு வாங்கிக்கும்!


நாம எப்படி இந்த ஹோட்டலை மூடினோம்?

ஒரு விவசாயி மண்ணோட தன்மையைத் தெரிஞ்சுக்காம, அளவுக்கு அதிகமா தண்ணீரில் கரையக்கூடிய யூரியாவையோ அல்லது டி.ஏ.பி (DAP) உரத்தையோ வேர்ல கொட்டும்போது என்ன நடக்கும்?

பயிருக்கு எந்த உழைப்பும் இல்லாம, ரசாயனப் பையில இருந்து சொகுசா சாப்பாடு கிடைக்கும். உடனே பயிர் யோசிக்கும்: "ஃப்ரீயாவே சாப்பாடு வரும்போது, நான் ஏன் கஷ்டப்பட்டு இலைகள்ல சர்க்கரையைச் சமைச்சு இந்த நுண்ணுயிர்களுக்குக் கொடுக்கணும்?"

உடனே வேர் தன் திரவச் சுரப்புகளை (Exudates) மொத்தமா நிறுத்திடும்.

பூமிக்கு அடியில் இருக்கும் அந்த ஹோட்டல் 'அவுட்'! சாப்பாடு கிடைக்காததால, பயிருக்கு உதவி செய்யுற நல்ல பாக்டீரியாக்களும் பூஞ்சை வலைப்பின்னல்களும் பட்டினி கிடந்து செத்துப்போயிடும். மண் இறுகிப் பாறையாகிடும். இதனால பயிர் முழுக்க முழுக்க ரசாயன உரத்துக்கு அடிமையாகிடும். நீங்க ரசாயனம் போடுறதை நிறுத்தின அடுத்த நாளே பயிர் பட்டினியால மஞ்சளாயிடும், ஏன்னா அதோட இயற்கை சப்ளை செயின் (Supply chain) மொத்தமா காலி!


நாம புரிஞ்சுக்க வேண்டிய விஷயம்:

ஊட்டச்சத்து விவசாயம்கிறது பூமிக்கு அடியில இருக்குற இந்த ஹோட்டலை எப்பவும் பிஸியா திறந்து வச்சிருக்கிறதுதான். மண்ணோட மினரல்களை நாம பேலன்ஸ் செஞ்சு, பயிரோட ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் போது, வேர்கள் தொடர்ந்து திரவக் கார்பனை பூமிக்குள்ள அனுப்பிட்டே இருக்கும்.

உங்க வேர்கள்ல இந்தச் சுரப்புகள் அதிகமா இருந்தா, மண் எப்பவும் பொலபொலப்பா இருக்கும், தண்ணீரை உறிஞ்சுற சக்தி ரெண்டு மடங்காகும், கோடிக்கணக்கான நுண்ணுயிர்கள் உங்களுக்காக ஒரு பைசா கூலி வாங்காம 24 மணி நேரமும் வேலை செய்யும்!

இதனால தான் நியூ விவா பயோ நூட்ரீயண்ட்ஸ்-ல நாங்க எப்பவும் பயிரின் ஆரோக்கியத்திற்கு முதல் முக்கியத்துவம் கொடுக்கிறோம். ஏன்னா பயிர் ஆரோக்கியமா இருந்தா, அது தன்னை சுற்றி இருக்கிற மண்ணை வளமாக்கிடும். பயிரும் நல்ல விளைச்சல் கொடுக்கும். மண்ணை சரி பண்ணிணா தான் பயிர் நல்லா வரும்னு இல்ல. நீங்க வைக்கிற பயிர தெளிவா, ஆரோக்கியமா வளர்த்துட்டீங்கண்ணா - மண் ரொம்ப வேகமா வளமாயிடும். இயற்கை இப்படி தான் வேலை செய்யுது. நாம இப்படி தான் விவசாயம் பண்ணனும்.

இன்னும் பேசுவோம்.

ரவிசங்கர் கருப்பையா New ViVa Bio Nutrients www.newviva.in 934 204 9144

Share this article

Help others discover this content

Share on social media:

Article URL:

https://newviva.in/blog/the-rhizosphere

More from science-deep-dives