குறிப்பு - இதன் தமிழாக்கம் இந்த பக்கத்தில் சற்று கீழே உள்ளது.
Join our WhatsApp group here - https://chat.whatsapp.com/DtRfcPrnZykIfmavZU6kj0
WA-014: Stage 2 of Plant Health — Complete Protein Synthesis
Stage 2 of Plant Health: Building the Armor Against Sucking Pests
Here is the English translation of the provided Tamil text, without any additions or subtractions:
"In the previous post, we saw the first stage of John Kempf's Plant Health Pyramid. In that, we learned how the crop builds a shield against root rot diseases through photosynthesis.
Today, we are going to climb to the next step of the pyramid — "Stage Two: Complete Protein Synthesis" . If your crop has reached this stage, your need to go to the pesticide shop will reduce by 90%. You can completely stop spraying for sap-sucking pests!
What is Stage 2 Health?
In the first stage, the leaves cook a lot of sugar and absorb raw nitrogen from the soil, right... The plants cannot keep that nitrogen in its raw form. Because that is very dangerous.
In this second stage, the crop combines that sugar and raw nitrogen, and very quickly stitches them together into Amino acids, and then into complete Complex Proteins.
The real goal of this second stage is this: Every drop of nitrogen nutrient absorbed by the crop through the roots must be converted into complete complex protein before sunset! There should be no unprocessed raw nitrogen or half-finished amino acids remaining in the leaf sap at night.
The protection this gives the crop: A barrier against sap-sucking pests!
If your crop fully performs this second-stage protein production, it gains a second natural shield. After this, none of the sap-sucking pests like aphids, thrips, whiteflies, greenflies, and spider mites can do anything to your crop!
Here is the explosive biological reason: These sap-sucking pests do not have a 'liver'! These pests have a very weak stomach; they can only drink raw amino acids and simple water sugars. Their stomachs lack the power to break down and digest the tough complex protein wires that the crop has produced.
If a thrips or whitefly bites this second-stage leaf... it cannot digest that sap, its stomach will swell, and it will die of starvation. Therefore, these pests will leave your field and flee to the weak, chemical-dependent field next door!
The Urea Trap: Why do pests explode in chemical fields?
Why do thrips and whiteflies come in waves to fields practicing chemical agriculture? Because the urea we dump forces raw nitrogen into the crop's body.
However, since the micro-nutrients needed to convert that nitrogen into protein are locked up in the soil, that protein stitching work stops halfway. Because of this, the leaf sap at night remains piled up like garbage with unprocessed raw nitrogen and amino acids. This is like sending out an invitation card to the pest world! All the sap-sucking pests around your land will come running into your field to eat this wonderful meal.
What nutrients are needed for this?
To convert raw nitrogen into quality complex protein before sunset, the crop needs three enzyme activators:
- Sulfur: This is the thread that stitches the most important amino acids (Methionine & Cysteine).
- Magnesium: To link the protein wires together.
- Molybdenum & Boron: The main switch that immediately converts raw nitrogen into a complex substance.
What we need to understand:
Don't spend money buying poison to kill thrips and whiteflies. Just give the crop the precise micronutrients it needs to fully perform its daily cooking task (protein stitching). When we balance the soil according to the Albrecht-Kinsey method, the structure for the crop to grow well is created! Beyond that, if there is a micronutrient deficiency in the soil, we have methods in New Viva Bio Nutrients to systematically provide that to the crop and grow it well. Once the crop grows vigorously, the soil quickly becomes fertile.
In our next message, we will look at Stage 3: High Lipid Synthesis, where the plant begins to manufacture pure essential oils to build resistance against beetles and chewing caterpillars. Stay tuned!
Ravishankar Karuppiah 934 204 9144
Tamil Version (தமிழ் வடிவம்)
WA-014: இரண்டாம் கட்ட ஆரோக்கியம் (Stage 2): சாறு உறிஞ்சும் பூச்சிகளை விரட்டும் இயற்கை கவசம்!
கடந்த பதிவுல ஜான் கெம்பின் தாவர ஆரோக்கிய பிரமிடோட முதல் கட்டத்தைப் பார்த்தோம். அதுல ஒளிச்சேர்க்கை மூலமா பயிர் எப்படி வேர் அழுகல் நோய்க்கு எதிரா கேடயம் அமைக்குதுன்னு தெரிஞ்சுக்கிட்டோம்.
இன்னைக்கு நாம பிரமிடோட அடுத்த படிக்கட்டுக்கு ஏறப்போறோம் — "இரண்டாம் கட்டம்: முழுமையான புரோட்டீன் உருவாக்கம்" (Complete Protein Synthesis). இந்த கட்டத்தை உங்க பயிர் அடைஞ்சிருச்சுனா, நீங்க பூச்சி மருந்து கடைக்கு போக வேண்டிய தேவை 90% குறைந்து விடும். சாறு உறிஞ்சும் பூச்சிகளுக்கு மருந்து அடிப்பதை மொத்தமா நிறுத்திடலாம்!
இரண்டாம் கட்ட ஆரோக்கியம் (Stage 2) என்றால் என்ன?
முதல் கட்டத்துல இலைகள் நிறைய சர்க்கரையைச் சமைச்சு, மண்ணுல இருந்து பச்சையான நைட்ரஜன் சத்தை உறிஞ்சுது இல்லையா... அப்படி வர்ற நைட்ரஜனை செடிகள் அப்படியே பச்சையா வச்சிருக்கக் கூடாது. ஏன்னா அது ரொம்ப ஆபத்தானது.
இந்த இரண்டாம் கட்டத்துல, பயிர் அந்தச் சர்க்கரையையும் பச்சையான நைட்ரஜனையும் ஒன்னா சேர்த்து, மிக வேகமா அமினோ அமிலங்களாகவும் (Amino acids), பிறகு முழுமையான கூட்டுப் புரோட்டீன்களாகவும் (Complex Proteins) மாத்தி தையல் போடும்.
இந்த இரண்டாம் கட்டத்தோட உண்மையான இலக்கு இதுதான்: வேர் வழியா பயிர் உறிஞ்சுற ஒவ்வொரு சொட்டு நைட்ரஜன் சத்தும், சூரியன் மறையுறதுக்குள்ள முழுமையான கூட்டுப் புரோட்டீனா மாறிடணும்! இரவு நேரத்துல இலையோட சாற்றுல எந்த ஒரு செரிக்கப்படாத பச்சையான நைட்ரஜனோ அல்லது அரைகுறை அமினோ அமிலங்களோ எஞ்சியிருக்கக் கூடாது.
இதனால பயிருக்குக் கிடைக்கும் பாதுகாப்பு: சாறு உறிஞ்சும் பூச்சிகளுக்குத் தடை!
உங்க பயிர் இந்த இரண்டாம் கட்ட புரோட்டீன் தயாரிப்பை முழுமையா செஞ்சிட்டா, அதுக்கு ரெண்டாவது இயற்கை கேடயம் கிடைச்சிடும். இதுக்கப்புறம் அசுவினி, இலைப்பேன் (Thrips), வெள்ளை ஈ (Whitefly), பச்சைப்பேன் மற்றும் சிலந்திக் பேன் போன்ற எந்த ஒரு சாறு உறிஞ்சும் பூச்சியும் உங்க பயிரை ஒன்னும் செய்ய முடியாது!
இதோட அதிரடியான உயிரியல் காரணம் இதுதான்: சாறு உறிஞ்சும் பூச்சிகளுக்கு 'கல்லீரல்' (Liver) கிடையாது! ரொம்ப பலவீனமான வயிறு இருக்குற இந்த பூச்சிகளால, பச்சையான அமினோ அமிலங்களையும் எளிய தண்ணீர் சர்க்கரையையும் மட்டும்தான் குடிக்க முடியும். பயிர் தயாரிச்சு வச்சிருக்கற கெட்டியான கூட்டுப் புரோட்டீன் ஒயர்களை உடைச்சு செரிக்க வைக்கிற சக்தி இந்தப் பூச்சிகளோட வயித்துக்குக் கிடையாது.
ஒரு இலைப்பீனோ அல்லது வெள்ளை ஈயோ இந்த இரண்டாம் கட்ட இலையை வந்து கடிச்சா... அதால அந்தச் சாற்றைச் செரிக்க முடியாம வயிறு உப்பி பட்டினியால செத்துடும். அதனால, இந்த பூச்சிகள் உங்க வயலைத் தாண்டி, பக்கத்துல இருக்குற பலவீனமான ரசாயன வயலைத் தேடி ஓடிடும்!
யூரியா வலை: ரசாயன வயல்களில் ஏன் பூச்சி மண்டுகிறது?
ஏன் ரசாயன விவசாயம் செய்யுற வயல்கள்ல எப்பவும் இலைப்பீனும் வெள்ளை ஈயும் அலை அலையா வருது? ஏன்னா, நாம அள்ளிப்போடுற யூரியா, பயிரோட உடம்புக்குள்ள பச்சையான நைட்ரஜனை திணிக்குது.
ஆனா, அந்த நைட்ரஜனை புரோட்டீனா மாத்துறதுக்குத் தேவையான மைக்ரோ-நியூட்ரியண்ட்ஸ் (நுண்ணூட்டச்சத்துக்கள்) மண்ணுல லாக் ஆகிக் கிடக்குறதால, அந்தப் புரதத் தையல் வேலை பாதியிலேயே நின்னுடும். இதனால, இரவு நேரத்துல இலைச் சாறு முழுக்க செரிக்கப்படாத பச்சையான நைட்ரஜனும் அமினோ அமிலங்களும் குப்பை மாதிரி தேங்கி நிக்கும். இது பூச்சி உலகத்துக்கு ஒரு இன்விடேஷன் கார்டு வச்சு கூப்பிடுற மாதிரி! உங்க நிலத்தை சுத்தி இருக்குற எல்லா சாறு உறிஞ்சும் பூச்சிகளும் இந்த அருமையான சாப்பாட்டைச் சாப்பிட உங்க வயலுக்குள்ள ஓடி வந்துடும்.
இதுக்கு என்ன சத்துக்கள் வேணும்?
பச்சையான நைட்ரஜனை சூரியன் மறையுறதுக்குள்ள தரமான கூட்டுப் புரோட்டீனா மாத்த பயிருக்கு மூன்று என்சைம் ஆக்டிவேட்டர்கள் வேணும்:
- சல்பர் (கந்தகம்): மிக முக்கியமான அமினோ அமிலங்களை (Methionine & Cysteine) தைக்கிற நூல் இதுதான்.
- மெக்னீசியம்: புரோட்டீன் ஒயர்களை ஒன்னா இணைக்க.
- மாலிப்டினம் & போரான்: பச்சையான நைட்ரஜனை உடனே கூட்டுப் பொருளா மாத்துற மெயின் சுவிட்ச்.
நாம புரிஞ்சுக்க வேண்டிய விஷயம்:
இலைப்பேனையும், வெள்ளை ஈயையும் கொல்ல காசு குடுத்து விஷம் வாங்காதீங்க. பயிர் தன் அன்றாட சமையல் வேலையை (புரோட்டீன் தையலை) முழுமையா செய்யுறதுக்கான துல்லியமான நுண்ணூட்டச்சத்துக்களை மட்டும் குடுங்க. மண்ணை நாம ஆல்பிரெக்ட்-கின்சி முறைப்படி பேலன்ஸ் செய்யும்போது பயிர் நல்லா வளர்வதுக்கான கட்டமைப்பு உருவாகிடும்! அதைத் தாண்டி மண்ணுல நுண்ணூட்டச் சத்துக்கள் பற்றாக்குறை இருந்ததுன்னா, நியூ விவா பயோ நூட்ரீயண்ட்ஸ்-ல அத எப்படி பயிருக்கு கொடுக்குறதுன்னு வழிமுறைய வச்சு கொடுத்தோம்னா, பயிர் தானா இந்த இரண்டாம் கட்ட நோய் எதிர்ப்பு சக்தியை அடைஞ்சு ஒரு இரும்புக்கோட்டையா மாறிடும்!
அடுத்த பதிவுல, வண்டுகளையும் இலை தின்னும் புழுக்களையும் அண்டவிடாமல் தடுக்கும் "மூன்றாம் கட்ட ஆரோக்கியம்: கொழுப்புச் சத்து உருவாக்கம்" (High Lipid Synthesis) பற்றிப் பார்ப்போம்.
இன்னும் பேசுவோம்.
ரவிசங்கர் கருப்பையா 934 204 9144



