science-deep-dives

WA-013: Stage 1 of Plant Health Pyramid — Complete Photosynthesis

Ravishankar Karuppiah
June 5, 2026

Understanding Plant Health Pyramid - Stage 1

WA-013: Stage 1 of Plant Health Pyramid — Complete Photosynthesis

குறிப்பு - இதன் தமிழாக்கம் இந்த பக்கத்தில் சற்று கீழே உள்ளது.

WA-013: Stage 1 of Plant Health — Complete Photosynthesis

Join our WhatsApp group here - https://chat.whatsapp.com/DtRfcPrnZykIfmavZU6kj0

Plant Health Pyramid: The First Step to Complete Disease Resistance!

For so long, we have believed that pests on farmland are an unavoidable curse. However, John Kempf, a pioneer who promotes regenerative / nutrient-dense farming systems worldwide, has broken this misconception and developed a profound scientific principle called the "Plant Health Pyramid."

He illustrates that depending on the nutrition a crop receives, its disease resistance increases through four stages. If you take your crop to the very top of this pyramid, no pest or disease will ever be able to touch it.

Today, let's look at the foundation of this pyramid: "Stage 1: Complete Photosynthesis."


What is Stage 1 Health?

Today, most crops in chemical farms operate their leaf factory at only 15% to 20% of their full genetic potential. That's why leaves appear small, pale, and weak.

When we balance the minerals in the soil, the crop's photosynthesis engine begins to run at an incredible speed. This is Stage 1 health.

A crop that reaches this stage will easily do two things:

  1. Produce broad, thick, dark green leaves and turn them into high-quality solar panels.
  2. During the day, produce abundant amounts of simple sugars (Glucose) and carbohydrates.

Changes Below Ground: Rising Brix!

Because the leaf factory is running at 100% speed, these simple sugars fill the plant's sap. This is why your Brix level rises dramatically, and the sap becomes thicker.

The plant pumps this excess energy from the sugars through its roots into the soil as 'solar currency' (Root Exudates), feeding billions of beneficial microorganisms in the soil.

What Protection Does the Crop Get?

Once your crop reaches this first stage, it gains its first natural shield. Harmful fungi like Pythium and Phytophthora, which come from the soil and cause root rot and damping-off diseases, can no longer harm your crop!

Why? The beneficial microorganisms that come to feed on the sugars from the roots form a fortress-like barrier around the roots. The harmful fungi cannot cross this barrier to attack the roots.

Which Nutrients Are Needed for This?

Whether it's mango, banana, coconut, or any other crop, to reach this foundational first stage, these five nutrients need to be available in the leaves every morning:

  • Magnesium (Mg) & Nitrogen (N): To build the green engine.
  • Iron (Fe) & Manganese (Mn): The spark plugs that capture sunlight.
  • Phosphorus (P): The battery that transports energy.

If any one of these nutrients is locked up in the soil, the crop will stumble right at the foundation of the pyramid.

So next time there's root rot, instead of running for a fungicide, see which nutrient is deficient and provide that. The vast majority of fungi living in the soil are either beneficial or harmless decomposers. Truly pathogenic, disease-causing fungi are a tiny minority. If we understand the nuances of the nutrients our crops need, we can greatly reduce the dangers to them."

In the next post, we'll discuss Stage 2 Health, which prevents the dreaded "sap-sucking insects" that are a major headache for our local farmers!


Tamil Version (தமிழ் வடிவம்)

தாவர ஆரோக்கிய பிரமிடு: பூரண நோய் எதிர்ப்பு சக்திக்கான முதல் படி!

விவசாய நிலத்துல பூச்சிங்க வர்றது ஒரு தவிர்க்க முடியாத சாபம்னு நாம இத்தனை காலமா நம்பிட்டு இருக்கோம். ஆனா, மீளுருவாக்க / ஊட்டச்சத்து விவசாய முறையை உலகெங்கும் எடுத்துச் செல்லும் முன்னோடி ஜான் கெம்ப் (John Kempf) இந்தத் தப்பான எண்ணத்தை உடைச்சு, "தாவர ஆரோக்கிய பிரமிடு" (Plant Health Pyramid) என்ற ஒரு உன்னதமான அறிவியல் விதியை உருவாக்கியிருக்கிறார்.

ஒரு பயிருக்குக் கிடைக்கிற ஊட்டச்சத்தைப் பொறுத்து, அதோட நோய் எதிர்ப்பு சக்தி 4 கட்டங்களா உயரும்னு அவர் கோடிட்டு காட்டியிறுக்கிறார். இந்த பிரமிடோட உச்சிக்கு உங்க பயிரை நீங்க கூட்டிட்டு போயிட்டா, எந்த ஒரு பூச்சியோ, நோயோ உங்க பயிரைத் தொடக்கூட முடியாது.

இன்னைக்கு நாம இந்த பிரமிடோட அஸ்திவாரமான "முதல் கட்டம்: முழுமையான ஒளிச்சேர்க்கை" (Complete Photosynthesis) பற்றிப் பார்ப்போம்.


முதல் கட்ட ஆரோக்கியம் (Stage 1) என்றால் என்ன?

இன்னைக்கு ரசாயன வயல்கள்ல இருக்குற பெரும்பாலான பயிர்கள் தங்களோட முழு மரபணு திறனில் வெறும் 15% முதல் 20% வேகத்துலதான் தங்களோட இலைத் தொழிற்சாலையை இயக்குது. அதான் இலைங்க சிறுத்து, வெளுத்துப்போய் கிடக்கு.

நாம மண்ணோட மினரல்களை பேலன்ஸ் செய்யும்போது, பயிரோட ஒளிச்சேர்க்கை எஞ்சின் அசாத்திய வேகத்துல இயங்க ஆரம்பிக்கும். இதுதான் முதல் கட்ட ஆரோக்கியம்.

இந்த நிலையை அடைஞ்ச பயிர் ரெண்டு விஷயங்களை அசால்ட்டா செய்யும்:

  1. நல்ல அகலமான, தடிமனான, கரும்பச்சை இலைகளை உருவாக்கி, அதை உயர்தர சோலார் பேனல்களா மாத்தும்.
  2. பகல் நேரத்துல தாறுமாறான அளவு திரவச் சர்க்கரைகளையும் (Glucose) எளிய கார்போஹைட்ரேட்டுகளையும் சமைக்கும்.

மண்ணுக்கு அடியில் நடக்கும் மாற்றம்: ப்ரிக்ஸ் உயர்வு!

இலைத் தொழிற்சாலை 100% வேகத்துல ஓடுறதால, இந்த எளிய சர்க்கரைகள் பயிரோட சாறு முழுக்க நிரம்பும். இதனாலதான் உங்க Brix அளவு டிஜிட்டலா உயரத் தொடங்குது. சாறு நல்லா திக்கா மாறும்.

இப்படித் தயாரிச்ச சர்க்கரையில இருக்குற உபரி எனர்ஜியை, பயிர் தன் வேர்கள் வழியா பூமிக்கு அடியில 'சூரியப் பணமா' (Root Exudates) பம்ப் செஞ்சு, மண்ணுல இருக்குற கோடிக்கணக்கான நல்ல நுண்ணுயிர்களுக்குச் சோறு போடும்.

இதனால பயிருக்குக் கிடைக்கும் பாதுகாப்பு என்ன?

உங்க பயிர் இந்த முதல் கட்டத்தை அடைஞ்ச உடனே, அதுக்கு முதல் இயற்கை கேடயம் கிடைச்சிடும். மண்ணில் இருந்து வந்து வேர்களை அழுக வைக்கும் வேர் அழுகல், நாற்று அழுகல் நோய்களை உண்டாக்கும் கெட்ட பூஞ்சாணங்களால் (Pythium, Phytophthora) உங்க பயிரை எதுவும் செய்ய முடியாது!

ஏன் தெரியுமா? வேர் வழியா வர்ற சர்க்கரையைச் சாப்பிட வர்ற நல்ல நுண்ணுயிர்கள் வேரைச் சுத்தி ஒரு பெரிய கோட்டை மாதிரி அரண் அமைச்சுடும். கெட்ட பூஞ்சைகளால அந்த அரணைத் தாண்டி வேரைத் தாக்க முடியாது.

இதுக்கு என்ன சத்துக்கள் வேணும்?

உங்க மா, வாழை, தென்னை அல்லது எந்த பயிரா இருந்தாலும், இந்த முதல் கட்ட அஸ்திவாரத்தை அடையணும்னா, ஒவ்வொரு நாளும் காலையில இலைகள்ல இந்த ஐந்து சத்துக்களும் தயாரா இருக்கணும்:

  • மெக்னீசியம் (Mg) & நைட்ரஜன் (N): பச்சைய எஞ்சினை உருவாக்க.
  • இரும்புச்சத்து (Fe) & மாங்கனீசு (Mn): சூரிய ஒளியை ஈர்க்கும் ஸ்பார்க் பிளக்குகள்.
  • பாஸ்பரஸ் (P): எனர்ஜியைக் கடத்தும் பேட்டரி.

மண்ணுல இதுல எந்த ஒரு சத்து லாக் ஆகியிருந்தாலும், பயிர் பிரமிடோட அஸ்திவாரத்திலேயே தடுமாறி நிக்கும்.

அடுத்த தடவ வேர் அழுகல் வந்ததுன்னா பூஞ்சாணக்கொல்லி நோக்கி ஓடாம, அந்த பயிருக்கு என்ன ஊட்டச்சத்து பற்றாக்குறை அப்படின்னு பார்த்து அதயும் கொடுங்க. மண்ணில் வாழுற பெரும்பாலான பூஞ்சாணங்கள், நன்மை செய்யும் பூஞ்சாணங்கள் தான். ஆனா ஒரு சிறு தீமை செய்யும் கூட்டத்துக்காக, நமக்கு தேவையான ஒரு பெரிய அரணையே அழிச்சிடறோம். இதனால பாதிப்பு நமக்கு தான். பயிருக்கு தேவையான ஊட்டச்சத்துக்களின் நுணுக்கங்களை புரிஞ்சிக்கிட்டா, நம்ம பயிருக்கு வரும் ஆபத்துகளை வெகுவாக குறைச்சிடலாம்.

அடுத்த பதிவுல, நம்ம ஊர் விவசாயிகளுக்குப் பெரிய தலைவலியா இருக்குற "சாறு உறிஞ்சும் பூச்சிகளை" அண்டவிடாமல் தடுக்கும் இரண்டாம் கட்ட ஆரோக்கியத்தை (Stage 2) பற்றிப் பார்ப்போம்!

இன்னும் பேசுவோம்.

Share this article

Help others discover this content

Share on social media:

Article URL:

https://newviva.in/blog/stage1-plant-health-pyramid

More from science-deep-dives