science-deep-dives

WA-004: Soil Balancing — The Secret Science of the Perfect Soil

Ravishankar Karuppiah
May 19, 2026

Understanding Soil Balancing

WA-004: Soil Balancing — The Secret Science of the Perfect Soil

குறிப்பு - இதன் தமிழாக்கம் இந்த பக்கத்தில் சற்று கீழே உள்ளது.

WA-004: Soil Balancing — The Secret Science of the Perfect Soil

Imagine you want to build a sturdy brick house. You buy cement, sand, and bricks. But what if you buy 100 bags of cement, only 2 bags of sand, and 10 bricks? Can you build a house? No. Even though you have the materials, the balance is completely wrong.

Many farmers treat their soil like that broken house. They see a weak plant and immediately dump more Urea (Nitrogen) or Potash, without checking if the soil actually needs it.

True regenerative agriculture doesn't just look at adding nutrients; it looks at Soil Balancing. This science was perfected by legendary agricultural scientists Dr. William Albrecht and his student Neil Kinsey.

The Albrecht Secret: The Soil is a Magnet

Dr. Albrecht discovered that soil particles act like tiny magnets. They hold onto positively charged nutrient salts like Calcium, Magnesium, Potassium, and Sodium.

Most labs just tell you the total quantity of N-P-K in your soil. But Albrecht and Kinsey proved that quantity doesn't matter if the ratio is wrong.

They discovered that for a plant to grow effortlessly, the soil "magnets" should ideally be occupied in a very specific balance:

  • 65% to 75% Calcium (Ca): The King of Nutrients. Calcium creates space in the soil, loosening it so roots can breathe and water can sink in.
  • 10% to 15% Magnesium (Mg): Magnesium tightens the soil. You need a little bit to hold things together, but too much will turn your clay soil into cement.
  • 3% to 5% Potassium (K): For fruit weight and sweetness.

Why "More" is Sometimes "Less"

Here is the golden rule of Neil Kinsey’s teachings: An excess of one nutrient can lock up and starve the plant of another.

For example, if your soil has too much Magnesium (common in many hard clay patches in Tamil Nadu), it locks up Calcium and Potassium. You could dump thousands of rupees of Potassium fertilizer into the ground, but the tree will never "see" it because the excess Magnesium is blocking the door.

The Takeaway for Today

Stop guessing. Stop thinking that if a 50kg bag of fertilizer is good, a 100kg bag must be better.

By applying the Albrecht/Kinsey method of soil balancing, we don’t just feed the plant—we fix the soil structure. When your Calcium and Magnesium are perfectly balanced, the soil naturally becomes loose, weeds disappear, water requirement drops, and the plant takes up nutrition automatically.

This is why in New ViVa Bio Nutrients, our first emphasis is on getting the soil profiled accurately before suggesting any recommendations. This is the scientific way. This is the future of farming.

Ravishankar Karuppiah New ViVa Bio Nutrients 934 204 9144


WA-004: மண் சமநிலை (Soil Balancing) — விவசாயத்தை மாற்றும் ரகசிய அறிவியல்!

நீங்க ஒரு உறுதியான செங்கல் வீடு கட்டப்போறீங்கன்னு வச்சுப்போம். அதுக்கு சிமெண்ட், மணல், செங்கல் எல்லாம் வேணும். ஆனா நீங்க 100 மூட்டை சிமெண்ட் வாங்கிட்டு, வெறும் 2 மூட்டை மணலும், 10 செங்கலும் வாங்கினா வீடு கட்ட முடியுமா? முடியாது. உங்ககிட்ட பொருட்கள் இருந்தாலும், அதோட "அளவு விகிதம்" (Balance) தப்பா இருக்கு.

இன்னைக்கு பல விவசாயிகள் தங்களோட நிலத்தை அப்படிப்பட்ட ஒரு வீடாத்தான் வச்சிருக்காங்க. பயிர் கொஞ்சம் டல்லா இருந்தா உடனே கடையில போய் யூரியாவையோ பொட்டாஷையோ வாங்கி கொட்டுறாங்க. ஆனா மண்ணுக்கு நிஜமாவே அதுதான் தேவையான்னு யோசிக்கிறது இல்ல.

மறுஉற்பத்தி / ஊட்டச்சத்து விவசாயத்தோட (Regenerative Agriculture) மிக முக்கியமான பகுதி — மண் சமநிலை (Soil Balancing). இதை உலகிற்கு சொல்லிக்கொடுத்தவங்க தான் பேராசிரியர்கள் டாக்டர் வில்லியம் ஆல்பிரெக்ட் (Dr. William Albrecht) மற்றும் அவரது மாணவர் நெய்ல் கின்சி (Neil Kinsey).

ஆல்பிரெக்ட் கண்டுபிடித்த ரகசியம்: மண் ஒரு காந்தம்!

மண்ணுல இருக்குற துகள்கள் எல்லாமே குட்டிக்குட்டி காந்தங்கள் மாதிரி வேலை செய்யுதுனு டாக்டர் ஆல்பிரெக்ட் கண்டுபிடிச்சார். இந்த காந்தங்கள் தங்களுக்குள்ள கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம் போன்ற நல்ல ஊட்டச்சத்து உப்புகளை புடிச்சு வச்சுக்கும்.

சாதாரண மண் பரிசோதனையில உங்க நிலத்துல எவ்வளவு சத்து இருக்குன்னு மட்டும் தான் சொல்வாங்க. ஆனா ஆல்பிரெக்ட் என்ன சொல்றார்னா, "அளவு முக்கியம் இல்ல, அதுங்க எந்த விகிதத்துல இருக்குங்கிறது தான் முக்கியம்."

அவரோட ஆராய்ச்சியின் படி, ஒரு பயிர் சூப்பரா வளரணும்னா, அந்த மண் காந்தத்துல சத்துக்கள் இந்த விகிதத்துல தான் இருக்கணும்:

  • 65% முதல் 75% கால்சியம் (Calcium): இவர்தான் ஊட்டச்சத்துக்களின் ராஜா. மண் துகள்களுக்கு நடுவுல இடைவெளியை உருவாக்கி, மண்ணை பொலபொலப்பாக்குறது இவர்தான். அப்பதான் வேர்கள் நல்லா சுவாசிக்கும், தண்ணீரும் உள்ள இறங்கும்.
  • 10% முதல் 15% மெக்னீசியம் (Magnesium): இது மண்ணை இருக்கமாக்கும். இது கொஞ்சமா வேணும், ஆனா அதிகமாயிட்டா களிமண் தரை சிமெண்ட் தரை மாதிரி இறுகிடும்.
  • 3% முதல் 5% பொட்டாசியம் (Potassium): காய்கள் நல்லா எடையும், இனிப்பும் வர இது முக்கியம்.

ஒன்னு அதிகமானா இன்னொன்னு கிடைக்காது!

நெய்ல் கின்சி ஒரு முக்கியமான விதியைச் சொல்றார்: "மண்ணுல ஒரு சத்து அளவுக்கு அதிகமா இருந்தா, அது இன்னொரு சத்தை பயிர்கள் உறிஞ்ச விடாம லாக் பண்ணிடும்."

உதாரணமா, உங்க நிலத்துல மெக்னீசியம் அதிகமா இருந்தா (நம்ம ஊர் களிமண் நிலங்கள்ல இது நடக்கும்), அது கால்சியத்தையும் பொட்டாசியத்தையும் லாக் செஞ்சிடும். நீங்க எவ்வளவுதான் காசு போட்டு பொட்டாஷ் உரம் வச்சாலும், பயிரால அதை எடுக்க முடியாது. ஏன்னா மெக்னீசியம் வாசலை மறிச்சு நின்னுட்டு இருக்கும்.

நாம புரிஞ்சுக்க வேண்டிய விஷயம்:

விவசாயம்கிறது குத்துமதிப்பா செய்யுற விஷயம் இல்ல. ஒரு மூட்டைக்கு பதிலா ரெண்டு மூட்டை போட்டா நல்லா வளரும்னு நினைக்கிறது தப்பு.

ஆல்பிரெக்ட் முறையில மண்ணை நாம பேலன்ஸ் செய்யும் போது, மண்ணோட அமைப்பே மாறுது. கால்சியமும் மெக்னீசியமும் சரியான விகிதத்துல வந்துட்டா... மண் தானா பொலபொலப்பாகும், களைகள் குறையும், தண்ணீர் தேவை பாதியா குறையும், பயிர்கள் தனக்கு தேவையான சத்தை தானாவே எடுத்துக்கும்!

இதனால தான் தெளிவான மண் பரிசோதனை ரொம்ப முக்கியம். நியூ விவா பயோ நூட்டரீண்ட்ஸ் (New ViVa Bio Nutrients)-ன் எந்த ஒரு தீர்வும், சரியான மண் பரிசோதனையின் முடிவுல இருந்து தான் ஆரம்பமாகுது. இது தான் சரியான விவசாயம். இது தான் விவசாயத்தின் எதிர்காலம்.

இன்னும் பேசுவோம்.

Share this article

Help others discover this content

Share on social media:

Article URL:

https://newviva.in/blog/soil-balancing-science

More from science-deep-dives