குறிப்பு - இதன் தமிழாக்கம் இந்த பக்கத்தில் சற்று கீழே உள்ளது.
If you talk to a conventional chemical farmer, they love their "salts" (like Urea and Potash) because they see quick growth. If you talk to a strict organic farmer, they often say, "Salts will ruin your soil, don't touch them!" Who is right? The truth is right in the middle, and it comes down to a big misunderstanding about what "salt" actually means in science.
Let’s clear the air: All plant nutrition in the soil must turn into a salt before a plant can drink it.
The Science: Why Plants Need "Salts"
Plants don't eat solid food. They drink their food. Whether you apply chemical fertilizer, cow manure, or compost, the microbes in the soil must break it down into tiny, electrically charged particles called ions. In chemistry, these dissolved minerals are called "salts."
Without these nutrient salts, life stops. They provide the cellular energy that keeps the plant alive, helps it photosynthesize, and makes fruit sweet.
So, if plants need salts, why does organic farming warn against them? Because not all salts are created equal.
The Bad Salts: The "Soil Destroyers"
When we use heavy chemical fertilizers like conventional Potassium Chloride (Muriate of Potash) or synthetic nitrogen, we are dumping highly concentrated, harsh salts into the soil.
Imagine putting a handful of common table salt on an earthworm or a snail. It dehydrates and kills them instantly. That is exactly what happens underground when we overload the soil with harsh chemical white powders. It burns the roots, kills the helpful fungal networks we talked about last time, and turns the soil into a hard, cracked brick.
The Good Salts: What is "OMRI Listed"?
This is where advanced agriculture comes in. You don't have to choose between starving your plants or killing your soil. There are naturally occurring, mineral-dense nutrient salts that give the plant immediate energy without harming the soil biology.
To help farmers find the safe stuff, there is an international gold standard called OMRI (Organic Materials Review Institute).
When a bio-input or a nutrient mineral is OMRI Listed, it means international scientists have rigorously tested it. It guarantees two things:
- It delivers the exact nutrient "salts" (like calcium, magnesium, or potassium) the plant needs to grow big and heavy.
- It will not kill your soil microbes or destroy your soil structure.
The Big Takeaway
Don't be afraid of the word "salt." Your crop needs nutrition, and nutrition is delivered via safe, natural salts.
The secret to smart, profitable farming isn't avoiding plant food. It's choosing smart nutrition over soil destruction. By using internationally approved, OMRI-level nutrient minerals, we feed the plant today and protect the soil for tomorrow.
We'll talk more.
Ravishankar Karuppiah New ViVa Bio Nutrients 934 204 9144
WA-003: உப்பு என்பது பயிருக்கு உணவா? விஷமா? (விவசாயிகளின் பெரிய குழப்பம்)
இன்னைக்கு ரசாயன விவசாயம் செய்யுறவங்ககிட்ட கேட்டா, "பொட்டாஷ், யூரியா போன்ற உப்புகள் (Salts) தான் பயிரை வேகமா வளர்க்குது"பாங்க. அதே ஒரு தீவிர இயற்கை விவசாயி கிட்ட கேட்டா, "ஐயையோ! உப்பு நிலத்தைக் கெடுத்துடும், அதைத் தொடவே கூடாது"ம்பாங்க.
யார் சொல்றது நிஜம்? இந்த ரெண்டுக்கும் நடுவுல ஒரு பெரிய அறிவியல் உண்மை ஒளிஞ்சிருக்கு. 'உப்பு' அப்படின்னா என்னங்கிறதை நாம சரியா புரிஞ்சுக்காததுதான் இந்த குழப்பத்துக்குக் காரணம்.
முதல்ல ஒரு உண்மையை நாம தெரிஞ்சுக்கணும்: மண்ணுல இருக்குற எந்த ஒரு ஊட்டச்சத்தும் 'உப்பு' (Salt) வடிவமா மாறினா மட்டும்தான் பயிர்களால அதை உறிஞ்சிக் குடிக்க முடியும்.
அறிவியல் உண்மை: பயிர்களுக்கு ஏன் 'உப்பு' வேணும்?
பயிர்கள் எதையும் மென்னு சாப்பிடாது; அதுங்க ஜூஸ் மாதிரி குடிக்கும். நீங்க ரசாயன உரம் போட்டாலும் சரி, மாட்டுச் சாணம் போட்டாலும் சரி... மண்ணுல இருக்குற நுண்ணுயிர்கள் அதை உடைச்சு, தண்ணீரில் கரையக்கூடிய மின்சாரம் கலந்த துகள்களா (Ions) மாத்தும். அறிவியல்ல இதுக்கு பேர் தான் "உப்பு" (Nutrient Salts).
இந்த உப்புகள் தான் தாவரங்களுக்குத் தேவையான ஆற்றலை (Energy) தருது. இலைகள் பச்சையாக இருக்கவும், காய் நல்லா திரட்சியா, இனிப்பா வளரவும் இந்த ஊட்டச்சத்து உப்புகள் ரொம்ப முக்கியம்.
அப்போ, இயற்கை விவசாயத்துல ஏன் உப்பை வேணாம்னு சொல்றாங்க? ஏன்னா, எல்லா உப்பும் ஒன்னு கிடையாது.
மண்ணைக் கெடுக்கும் "மோசமான உப்புகள்"
நாம கடையில வாங்கிப் போடுற வீரியமிக்க ரசாயன உரங்கள் (உதாரணமா, யூரியா, பொட்டாஷ்) எல்லாமே கடுமையான ரசாயன உப்புகள்.
ஒரு மண்புழு மேலயோ இல்ல அட்டைப்பூச்சி மேலயோ சாதாரண சாப்பாட்டு உப்பைக் கொட்டினா அது எப்படி உடனே சுருண்டு செத்துடுமோ... அதேதான் மண்ணுக்கு அடியிலயும் நடக்குது. இந்தத் தீவிர ரசாயன உப்புகள் - மண்ணோட ஈரப்பதத்தை உறிஞ்சி, வேர்களைக் கருக வச்சு, நாம போன தடவை பார்த்த 'பூஞ்சைதொடரை' (Fungal networks) மொத்தமா அழிச்சிடுது. இதனாலதான் நிலம் சிமெண்ட் தரை மாதிரி இறுகிப் போகுது.
மண்ணைக் காக்கும் "நல்ல உப்புகள்" (OMRI விளக்கம்)
பயிருக்கு ஊட்டச்சத்தும் வேணும், அதே சமயம் மண்ணும் வீணாகக் கூடாது—இதுக்கு தீர்வு யாருன்னா, இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய சில கனிம உப்புகள் (Mineral salts). இவை மண்ணோட உயிரோட்டத்தைக் கெடுக்காம, பயிருக்குத் தேவையான எனர்ஜியைக் கொடுக்கும்.
இதை உலக அளவில் சான்றளிக்க ஒரு அமைப்பு இருக்கு, அதுக்கு பேர்தான் OMRI (Organic Materials Review Institute).
ஒரு இயற்கை இடுபொருளோ அல்லது கனிம ஊட்டச்சத்தோ "OMRI சான்றிதழ்" பெற்றிருக்கு அப்படின்னா, சூழல் மற்றும் இயற்கை சார்ந்த விஞ்ஞானிகள் அதை ஆராய்ச்சி பண்ணி ஓகே சொல்லிருக்காங்கன்னு அர்த்தம். அது ரெண்டு விஷயத்தை உறுதி செய்யுது:
- பயிர் உடனே உறிஞ்சுக்கக் கூடிய தரமான ஊட்டச்சத்தை (கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், போரான், துத்தநாகம் போன்ற நல்ல உப்புகளை) அது கொடுக்கும்.
- இதனால மண்ணுல இருக்குற நுண்ணுயிர்களுக்கு எந்த ஆபத்தும் வராது.
நாம புரிஞ்சுக்க வேண்டிய விஷயம்:
"உப்பு"ங்கிற வார்த்தையைக் கேட்டு பயப்படாதீங்க. உங்க பயிருக்குச் சத்து வேணும்னா அது உப்பு வடிவத்துல தான் கிடைக்கணும்.
ஆனா, அது மண்ணைக் கொல்லும் ரசாயன உப்பா? இல்ல உங்க பயிருக்கு தேவையான ஊட்டச்சத்து உப்பா (OMRI Approved)? அப்படிங்கிறதுல தான் விவசாயியோட புத்திசாலித்தனமே இருக்கு. மண்ணை அழிக்காம, பயிருக்குச் சரியான ஊட்டச்சத்தைக் குடுப்போம்! நஞ்சில்லா விளைச்சலை பெருக்குவோம்!!!
இன்னும் பேசுவோம்.
ரவிசங்கர் கருப்பையா New ViVa Bio Nutrients 934 204 9144



