குறிப்பு - இதன் தமிழாக்கம் இந்த பக்கத்தில் சற்று கீழே உள்ளது
WA-007: Plant Nutrients and Soil Ratio Secrets
Think of a wooden water barrel. If one of the wooden planks is broken halfway down, can you fill the barrel to the top? No. The water will leak out of the lowest broken plank, no matter how tall or strong the other planks are.
In science, this is called Liebig's Law of the Minimum. Your crop yield is always limited by the scarcest nutrient resource, not the most abundant one. You can dump a truckload of Nitrogen, but if your soil lacks a tiny gram of Zinc or Boron, your yield will stall at that lowest plank.
To fix the barrel, we must look at the complete architectural design of your soil. Let's break down the data from the legendary Albrecht-Kinsey models and look at the 18 essential elements your farm needs.
Part 1: The Albrecht-Kinsey Soil Balancing Blueprint
Dr. William Albrecht proved that instead of trying to feed the plant directly with chemical shots, we must structure the soil matrix. When you balance the minerals on your soil's "magnet slots" (Cation Exchange Capacity), you trigger a powerful explosion of biological activity.
Here is the ideal Base Saturation percentage your soil test should show:
Calcium (Ca): Should be at 65% – 75%. Known as the king of nutrients. It loosens the soil and allows roots to breathe.
Magnesium (Mg): Should be at 10% – 15%. It holds the soil together. If it becomes excessive, the soil hardens like cement.
Potassium (K): Should be at 2% – 5%. It is responsible for the weight, density, and sweetness of fruits.
Sodium (Na): Should be at 0.5% – 1%. Required in very small amounts; if it becomes excessive, the soil becomes saline.
Hydrogen (H): Should be at 10% – 15%. The factor that controls the acid-base balance of the soil.
The Golden Nutrient Ratios
His student, Neil Kinsey, took this further. He proved that elements act like rival siblings—if one is too high, it blocks the other (Nutrient Antagonism). For example, excess Phosphorus blocks Zinc.
To keep your soil loose and permeable, your test must hit these precise structural ratios:
- Ca : Mg (Calcium to Magnesium): 4:1 to 7:1 (The ultimate sweet spot for a fluffy soil structure)
- Mg : K (Magnesium to Potassium): 2:1 to 4:1
- Ca : K (Calcium to Potassium): 10:1 to 25:1
- P : Zn (Phosphorus to Zinc): 10:1 (Crucial for preventing leaf sizing issues)
- Fe : Mn (Iron to Manganese): 1.5:1 to 2.5:1
Part 2: The Three Vital Health Checkpoints
Before looking at fertilizers, check these three core parameters on your soil report:
- Soil pH (Ideal: 6.0 – 7.0): This is the master control switch. Extreme acidity or alkalinity locks up essential micronutrients and completely freezes the decomposition of organic matter.
- Organic Carbon (Ideal: greater than 0.5%): This is the fuel tank for your microbes. High carbon acts like a thermal shield against droughts and expands your soil's wallet size (CEC).
- Electrical Conductivity (EC) (Safe: less than 2.0 dS/m): This measures dissolved chemical salts. High salinity creates an invisible pressure that prevents root zones from absorbing water.
Part 3: The 18 Essential Elements of Life
To complete its life cycle, every single plant on your farm needs exactly 18 elements. No exceptions.
The Structural Pillars (Free from Air & Water)
- Carbon (C): The basic building block. Plants capture this from $CO_2$ during photosynthesis to build wood, leaves, and sugars.
- Hydrogen (H): Derived from water ($H_2O$), it drives the cellular energy pumps ($ATP$) inside the plant.
- Oxygen (O): Powers cellular respiration, allowing roots to break down sugars and actively absorb nutrition.
The Primary Big Three (The Common Inputs)
- Nitrogen (N): Drives vegetative growth and leaf greenness. It is the core molecule of chlorophyll and amino acids.
- Phosphorus (P): The battery pack. Powers energy storage, root development, and heavy flowering.
- Potassium (K): The water manager. Regulates leaf pores (stomata), builds drought resistance, and maximizes crop quality.
The Secondary Trio (The Soil Structurers)
- Calcium (Ca): The cellular glue (Calcium Pectate) that builds strong cell walls and thick fruit skin.
- Magnesium (Mg): The absolute center of the chlorophyll molecule—the engine of photosynthesis.
- Sulfur (S): Builds protein structures and develops the distinct aromas and flavors in your harvest.
The Mighty Micronutrients (The Precision Triggers)
- Iron (Fe): The essential catalyst for chlorophyll synthesis.
- Manganese (Mn): The water-splitter. It breaks water molecules during photosynthesis to release oxygen.
- Zinc (Zn): The growth hormone factory. It synthesizes auxins that govern leaf sizing and node elongation.
- Copper (Cu): Strengthens cell walls and prevents weak, floppy stems.
- Boron (B): Governs pollination, ensures pollen tube growth, and acts as the conveyor belt for moving sugars.
- Molybdenum (Mo): The nitrogen converter. Without it, plants cannot turn nitrates into usable proteins.
- Chlorine (Cl): Regulates cell pressure and ionic balance.
- Nickel (Ni): Prevents toxic urea accumulation in leaves by activating the urease enzyme.
- Silicon (Si): Creates a physical silica shield in cell walls, providing mechanical resistance to pest attacks.
The Takeaway
Farming isn't about buying a random bag of fertilizer and hoping for the best. It’s an exact molecular puzzle. When you balance these ratios, you don't just grow a crop—you build an unbreakable natural ecosystem. Check your latest soil test against these charts today!
Tamil Version (தமிழ் வடிவம்)
WA-007: ஊட்டச்சத்துக்கள் மற்றும் மண் விகிதங்களின் ரகசியம்
ஒரு மரத்தாலான தண்ணீர் பேரலை (Water barrel) கற்பனை செய்து கொள்ளுங்கள். அதில் இருக்கும் ஒரு மரப்பலகை மட்டும் பாதியில் உடைந்திருந்தால், உங்களால் அந்த பேரலில் முழுமையாக தண்ணீர் நிரப்ப முடியுமா? முடியாது. மற்ற பலகைகள் எவ்வளவு நீளமாக இருந்தாலும், உடைந்த அந்தப் பலகையின் வழியாகவே தண்ணீர் வெளியேறிவிடும்.
விவசாய அறிவியலில் இதற்கு லீபிக்கின் குறைந்தபட்ச விதி (Liebig's Law of the Minimum) என்று பெயர். உங்கள் நிலத்தின் மகசூல் என்பது நீங்கள் அதிகமாகக் கொடுக்கும் சத்தைப் பொறுத்தது அல்ல; எந்தச் சத்து மிகக் குறைந்த அளவில் இருக்கிறதோ, அதைப்பொறுத்துத்தான் உங்கள் ஒட்டுமொத்த மகசூலும் தீர்மானிக்கப்படும். நீங்கள் லோடு லோடாக நைட்ரஜன் கொட்டினாலும், ஒரு கிராம் துத்தநாகமோ (Zinc) அல்லது போரானோ (Boron) குறைந்தால் கூட, அந்த உடைந்த பலகை போல உங்கள் மகசூல் சரிந்துவிடும்.
மண்ணை முழுமையாகச் சீரமைக்க, நாம் அதன் முழுமையான கட்டமைப்பு அறிவியலைத் தெரிந்துகொள்ள வேண்டும். உலகப் புகழ்பெற்ற ஆல்பிரெக்ட் - கின்சி முறையையும், உங்கள் பயிருக்குத் தேவைப்படும் ஊட்டச்சத்துக்கள் எதற்காக தேவைப்படுகிறது என்பதை பற்றியும் இப்போது விரிவாகப் பார்ப்போம்.
பகுதி 1: ஆல்பிரெக்ட்-கின்சி மண் சமநிலை ப்ளூபிரிண்ட்
டாக்டர் வில்லியம் ஆல்பிரெக்ட், ரசாயனங்கள் மூலம் பயிருக்கு நேரடியாக உணவளிப்பதை விட, மண்ணின் கட்டமைப்பைச் சரி செய்வதே முக்கியம் என்று நிரூபித்தார். மண்ணின் 'காந்த இடங்களில்' (CEC) மினரல்களைச் சரியான விகிதத்தில் நாம் நிரப்பும்போது, அங்கு நுண்ணுயிர்களின் பெருக்கம் பல மடங்கு அதிகரிக்கும்.
உங்கள் மண் பரிசோதனை அறிக்கையில் இருக்க வேண்டிய உகந்த மண் சமிப்புத் திறன் விகிதம் (Base Saturation Percentages) இதோ:
கால்சியம் (Ca): இருக்க வேண்டிய சரியான அளவு 65% – 75%. ஊட்டச்சத்துக்களின் ராஜா. மண்ணைத் தளர்த்தி வேர்களைச் சுவாசிக்க வைக்கும்.
மெக்னீசியம் (Mg): இருக்க வேண்டிய சரியான அளவு 10% – 15%. மண்ணைப் பிடித்து வைக்கும். அதிகமாய்ப் போனால் மண் சிமெண்ட் போல இறுகிவிடும்.
பொட்டாசியம் (K): இருக்க வேண்டிய சரியான அளவு 2% – 5%. காய்களின் எடை, திரட்சி மற்றும் இனிப்புத் தன்மைக்கு இதுதான் காரணம்.
சோடியம் (Na): இருக்க வேண்டிய சரியான அளவு 0.5% – 1%. மிகக் குறைந்த அளவில் தேவை; அதிகமாய்ப் போனால் மண் உவர்ப்பாக மாறும்.
ஹைட்ரஜன் (H): இருக்க வேண்டிய சரியான அளவு 10% – 15%. மண்ணின் அமில-கார சமநிலையைக் கட்டுப்படுத்தும் காரணி.
மினரல்களின் பரஸ்பர விகிதங்கள் (Nutrient Ratios)
இவரது மாணவர் நெய்ல் கின்சி, சத்துக்கள் ஒன்றுக்கொன்று எதிரிகளாகவும் மாறும் என்று நிரூபித்தார் (Nutrient Antagonism). அதாவது, ஒரு சத்து அளவுக்கு அதிகமாக இருந்தால், அது மற்றொரு சத்தை பயிர்கள் எடுக்க விடாமல் லாக் செய்துவிடும். உதாரணத்திற்கு: பாஸ்பரஸ் அதிகமானால் துத்தநாகம் (Zinc) லாக் ஆகும். (இதைப் பற்றி இன்னும் விரிவாக இன்னொரு பதிவில் காண்போம்)
உங்கள் மண் எப்போதும் பொலபொலப்பாகவும், காற்றோட்டமாகவும் இருக்க இந்த விகிதங்கள் மிக முக்கியம்:
- Ca : Mg (கால்சியம் - மெக்னீசியம் விகிதம்): 4:1 முதல் 7:1 வரை (மண் பஞ்சு போல இருக்க இதுதான் மிக முக்கிய சாவி)
- Mg : K (மெக்னீசியம் - பொட்டாசியம் விகிதம்): 2:1 முதல் 4:1 வரை
- Ca : K (கால்சியம் - பொட்டாசியம் விகிதம்): 10:1 முதல் 25:1 வரை
- P : Zn (பாஸ்பரஸ் - துத்தநாக விகிதம்): 10:1 (இலைகளின் அளவு சிறுத்துப் போவதைத் தடுக்க இது அவசியம்)
- Fe : Mn (இரும்பு - மாங்கனீசு விகிதம்): 1.5:1 முதல் 2.5:1 வரை
பகுதி 2: மண்ணின் 3 முக்கிய ஆரோக்கிய புள்ளிகள்
உரங்களை வாங்குவதற்கு முன், உங்கள் மண் பரிசோதனை அறிக்கையில் இந்த மூன்றையும் கவனியுங்கள்:
- மண் pH (உகந்த அளவு: 6.0 – 7.0): பெரும்பாலான காய்கறி மற்றும் தானியப் பயிர்களுக்கு இது தான் அளவு. மண் அதிக அமிலமாகவோ அல்லது காரமாகவோ மாறினால், மைக்ரோ-நியூட்ரியண்ட்ஸ் எனப்படும் நுண்ணூட்டச்சத்துக்கள் லாக் ஆகிவிடும்; மட்கும் தன்மையும் நின்றுவிடும்.
- கரிமக் கார்பன் (Organic Carbon) (உகந்த அளவு: >0.5%): இது நுண்ணுயிர்களின் எரிபொருள் டேங்க். கார்பன் அதிகமாக இருந்தால், வறட்சிக் காலங்களில் மண் ஈரப்பதத்தைத் தக்கவைத்துக் கொள்ளும், மண்ணின் CEC சேமிப்புத் திறனும் அதிகரிக்கும்.
- மின் கடத்துத்திறன் (EC) (பாதுகாப்பான அளவு: <2.0 dS/m): இது மண்ணில் கரைந்துள்ள ரசாயன உப்புகளின் அளவைக் குறிக்கும். இது அதிகமானால், வேர்களால் தண்ணீரை உறிஞ்ச முடியாத ஒரு அழுத்தம் (Osmotic Pressure) உருவாகும்.
பகுதி 3: பயிர்களின் வாழ்வாதாரமான 18 ஊட்டச்சத்துக்கள்
உங்கள் நிலத்தில் இருக்கும் எந்த ஒரு பயிரும் அதன் முழு வாழ்நாளை நிறைவு செய்ய நிறைய தனிமங்கள் தேவை. ஆனால் இன்று பயிர் அறிவியல் 18-ஐ மட்டும் பரிந்துரைகிறது. ஒவ்வொன்றும் பயிருக்கு என்ன செய்கிறது என்பதை இங்கே காண்போம்.
கட்டமைப்புத் தூண்கள் (காற்று மற்றும் தண்ணீரில் இருந்து கிடைப்பவை)
- கார்பன் (C): தாவர உடலின் அடிப்படை அஸ்திவாரம். ஒளிச்சேர்க்கையின் போது $CO_2$-ல் இருந்து எடுக்கப்பட்டு, சர்க்கரையாகவும் ஸ்டார்ச்சாகவும் மாறுகிறது.
- ஹைட்ரஜன் (H): தண்ணீரில் இருந்து எடுக்கப்படுகிறது. தாவர செல்லுக்குள் ஆற்றலை கடத்த ($ATPase$) இது மிக முக்கியம்.
- ஆக்ஸிஜன் (O): தாவரங்களின் சுவாசம் மற்றும் ஆற்றல் வெளியீட்டிற்கு இது அவசியம்.
முதன்மை ஊட்டச்சத்துக்கள் (நாம் அதிகம் போடும் மூவர்)
- நைட்ரஜன் (N): பயிரின் வளர்ச்சி மற்றும் இலைகளின் பச்சையத்திற்கு காரணம். புரோட்டீன் மற்றும் குளோரோபில் உருவாக்கத்தின் அடிப்படை இதுவே.
- பாஸ்பரஸ் (P): தாவரத்தின் பேட்டரி. ஆற்றல் சேமிப்பு, வேர் வளர்ச்சி மற்றும் பூக்கள் எடுப்பதற்கு இதுவே சக்தி தருகிறது.
- பொட்டாசியம் (K): நீர் மேலாளர். இலையின் துவாரங்களை (Stomata) கட்டுப்படுத்துகிறது; வறட்சி மற்றும் நோயெதிர்ப்பு சக்தியைத் தருகிறது.
இரண்டாம் நிலை ஊட்டச்சத்துக்கள் (மண்ணை வடிவமைப்பவர்கள்)
- கால்சியம் (Ca): செல்லின் சுவர் பலமாக இருக்க உதவும் பசை (Calcium Pectate). வேர் வளர்ச்சிக்கும் பழங்களின் தோல் தடிமனாக இருக்கவும் இது அவசியம்.
- மெக்னீசியம் (Mg): ஒளிச்சேர்க்கையின் பவர்ஹவுஸ். குளோரோபில் மூலக்கூறின் மையப்பகுதியே இந்த மெக்னீசியம்தான்.
- சல்பர் / கந்தகம் (S): பயிர்களின் புரோட்டீன் கட்டமைப்பு மற்றும் விளைச்சலின் தனித்துவமான சுவை மற்றும் வாசனைக்கு இதுவே காரணம்.
நுண்ணூட்டச்சத்துக்கள் (துல்லியமாக வேலை செய்யும் தூண்டுகோல்கள்)
- இரும்புச்சத்து (Fe): பச்சையம் (Chlorophyll) உருவாவதற்கான மிக முக்கியமான வினையூக்கி.
- மாங்கனீசு (Mn): ஒளிச்சேர்க்கையின் போது தண்ணீர் மூலக்கூறுகளை உடைத்து ஆக்ஸிஜனை வெளிப்படுத்தும் முக்கிய வேலை இவருடையது.
- துத்தநாகம் / ஜிங்க் (Zn): தாவர வளர்ச்சி ஹார்மோன்களின் (Auxins) தொழிற்சாலை. கணுக்கள் நீளமாக வளரவும், இலைகளின் சைஸ் பெரிதாக இருக்கவும் இது அவசியம்.
- செம்பு / காப்பர் (Cu): செல் சுவர்களை வலுப்படுத்தி, தண்டுகள் பலவீனமாகி சாய்ந்துவிடாமல் பாதுகாக்கிறது.
- போரான் (B): மகரந்தச் சேர்க்கை (Pollination) மற்றும் பூக்கள் காய்களாக மாறுவதை இதுதான் நிர்வகிக்கிறது. இலையிலிருந்து சர்க்கரையை பழங்களுக்குக் கடத்த பாதை அமைப்பது இது தான்.
- மாலிப்டினம் (Mo): நைட்ரஜனை அமினோ அமிலங்களாக மாற்றும் என்சைம்களை இதுவே இயக்குகிறது.
- குளோரின் (Cl): செல்லின் உள் அழுத்தத்தையும் அயனி சமநிலையையும் பராமரிக்கிறது.
- நிக்கல் (Ni): இலைகளில் யூரியா நச்சுத்தன்மை அடைந்து கருகிவிடாமல் தடுக்கும் என்சைம்களை உருவாக்குகிறது.
- சிலிக்கான் (Si): செல் சுவர்களில் ஒரு பாதுகாப்பு அரணை உருவாக்கி, பூச்சிகள் மற்றும் நோய்த் தாக்குதலில் இருந்து பயிரைக் காக்கிறது.
நாம புரிஞ்சுக்க வேண்டிய விஷயம்:
விவசாயம்கிறது கடையில கிடைக்கிற ஏதோ ஒரு உர மூட்டையை வாங்கி வந்து கொட்டுறது இல்ல. அது ஒரு துல்லியமான அறிவியல் கணக்கு. இந்த 18 சத்துக்களையும், அதன் விகிதங்களையும் நாம் சமநிலைப்படுத்தும் போது, பயிர்கள் தானாகவே நோய் நொடியில்லாமல் அசாத்திய மகசூலைக் கொடுக்கும்.
இது தான் நியூ விவா பயோ நூட்ரீயண்ட்ஸ்-ன் அடிப்படை தத்துவம். இயற்பியலும், வேதியியலும் சீராக இருக்கும் போது தான் உயிரியல் நன்றாக வேலை செய்யும். இது தான் பரிணாம வளர்ச்சி (Evolution) நமக்கு சொல்லும் பாடம். மண்ணையும், நம்மையும் காப்பற்ற இது ஒன்றே வழி.
இன்னும் பேசுவோம்.
ரவிசங்கர் கருப்பையா New ViVa Bio Nutrients www.newviva.in 934 204 9144
எங்களின் முந்தைய கட்டுரைகளை படிக்க, www.newviva.in/blog என்ற இணைய முகவரியை தொடர்பு கொள்ளவும்.
எங்கள் வாட்ஸ்அப் குழுவில் இணைய, இங்கே அணுகவும் - https://chat.whatsapp.com/DtRfcPrnZykIfmavZU6kj0
முடிந்தவரை எல்லா விவசாயிகளுக்கும் பகிருங்கள். மீளுருவாக்க / ஊட்டச்சத்து விவசாயம் (Regenerative Agriculture) ஒன்று தான் விவசாயத்தின் எதிர்காலம். சரியான விளைச்சலில் இருந்து, ஊட்டச்சத்தில் இருந்து, கார்பன் கிரெடிட்ஸ்-ல் இருந்து - எல்லாவற்றிக்கும் ஒரு அடிதளமாக இந்த விவசாய முறை தான் இருக்கும்.



