குறிப்பு - இதன் தமிழாக்கம் இந்த பக்கத்தில் சற்று கீழே உள்ளது.
WA-008: Mulder’s Chart — The Friendships and Rivalries Inside Your Soil
Imagine you invite two people to dinner who absolutely hate each other. Instead of enjoying the meal, they spend the whole night fighting, blocking the doorway, and ruining the party.
That is exactly what happens underground when you blindly mix fertilizers.
Just because your soil test says a nutrient is present doesn't mean your plant can drink it. Nutrients interact constantly. In 1953, a scientist named D. von Mulder mapped out these hidden interactions in a famous circle called Mulder’s Chart.
When you look at this chart, you will see two types of relationships:
- Synergy (The Friends 🟢): When one nutrient is present, it acts like a helper, making it easier for the plant to absorb its partner.
- Antagonism (The Rivals 🔴): When you put too much of one nutrient, it literally blocks the door (lockout), starving the plant of another essential element.
Let’s decode the secret relationship status of your soil nutrients so you can stop causing accidental lockouts.
The Primary Big Three
1. Nitrogen (N) — The Leaf Builder
-
Best Friends 🟢: Sulfur (S), Molybdenum (Mo), Magnesium (Mg).
-
Why: Sulfur is required to turn Nitrogen into amino acids. Molybdenum activates the specific enzymes that process Nitrogen.
-
Bitter Rivals 🔴: Potassium (K), Boron (B), Copper (Cu).
-
The Trap: Dumping excess chemical Potassium can aggressively suppress Nitrogen absorption, leaving your crops yellow despite throwing Urea.
2. Phosphorus (P) — The Energy Pack
-
Best Friends 🟢: Magnesium (Mg), Manganese (Mn), Molybdenum (Mo).
-
Why: Magnesium acts like an escort, improving Phosphorus mobility inside the plant tissues.
-
Bitter Rivals 🔴: Zinc (Zn), Iron (Fe), Copper (Cu), Calcium (Ca).
-
The Trap: This is the most common disaster in Tamil Nadu. When you apply too much chemical Phosphorus, it binds with Zinc and Iron in the soil, turning them into a hard stone that roots cannot absorb.
3. Potassium (K) — The Quality Driver
- Best Friends 🟢: Magnesium (Mg), Iron (Fe), Manganese (Mn).
- Bitter Rivals 🔴: Calcium (Ca), Nitrogen (N), Boron (B).
- The Trap: Overloading on Potash fertilizer blocks Calcium and Nitrogen. This leads to weak plant cell walls, poor protein production, and fruit dropping.
The Secondary Trio
4. Calcium (Ca) — The Cellular Glue
-
Best Friends 🟢: Boron (B), Magnesium (Mg).
-
Why: Calcium cannot travel inside the plant without Boron. Boron is the conveyor belt that transports Calcium to the growing fruit skin.
-
Bitter Rivals 🔴: Potassium (K), Phosphorus (P).
5. Magnesium (Mg) — The Photosynthesis Engine
- Best Friends 🟢: Phosphorus (P), Calcium (Ca).
- Bitter Rivals 🔴: Potassium (K), Manganese (Mn).
- The Trap: High Potassium levels aggressively compete with Magnesium for root entry slots.
6. Sulfur (S) — The Flavor Builder
- Best Friends 🟢: Nitrogen (N), Magnesium (Mg), Molybdenum (Mo).
- Bitter Rivals 🔴: Selenium (Se).
The Precision Micronutrients
7. Iron (Fe)
- Best Friends 🟢: Copper (Cu), Manganese (Mn), Zinc (Zn).
- Bitter Rivals 🔴: Phosphorus (P), Calcium (Ca), Molybdenum (Mo).
- The Trap: Excess Calcium or Phosphorus shuts the door on Iron, causing leaf bleaching (chlorosis).
8. Manganese (Mn)
- Best Friends 🟢: Iron (Fe), Zinc (Zn), Magnesium (Mg).
- Bitter Rivals 🔴: Calcium (Ca), Phosphorus (P).
9. Zinc (Zn)
- Best Friends 🟢: Manganese (Mn), Iron (Fe).
- Bitter Rivals 🔴: Phosphorus (P), Calcium (Ca).
10. Copper (Cu)
- Best Friends 🟢: Zinc (Zn), Iron (Fe).
- Bitter Rivals 🔴: Molybdenum (Mo).
11. Boron (B)
- Best Friends 🟢: Calcium (Ca), Nitrogen (N).
- Bitter Rivals 🔴: Potassium (K).
12. Molybdenum (Mo)
- Best Friends 🟢: Nitrogen (N), Sulfur (S), Phosphorus (P).
- Bitter Rivals 🔴: Copper (Cu), Iron (Fe).
The Big Takeaway
Are you starting to see the matrix? If your Mango trees or Bananas show a Zinc or Calcium deficiency, buying a random bag of Zinc or Calcium spray might not fix it. The deficiency might be happening simply because you applied too much Phosphorus or Potassium last month!
Stop treating nutrients like isolated inputs. In regenerative agriculture, we balance the whole family table using Mulder's Chart so every element plays nice and your input costs drop down drastically.
If we understand this well, our farming can move to world-class standards — faster than we think. This is our future. And New Viva Bio Nutrients is here to make that a reality, right in our own backyard.
We'll talk more.
Ravishankar Karuppiah 934 204 9144
To join our Whatsapp group, please click here - https://chat.whatsapp.com/DtRfcPrnZykIfmavZU6kj0
WA-008: மல்டரின் வரைபடம் (Mulder’s Chart) — மண்ணுக்குள் நடக்கும் பாசப் போராட்டமும், பகைமையும்!
ஒரே பந்திக்கு, ஒருத்தருக்கு ஒருத்தர் சுத்தமா பிடிக்காத ரெண்டு பேரை கூப்பிட்டு உட்கார வச்சா என்னாகும்? அவங்க நிம்மதியா சாப்பிட மாட்டாங்க; மத்தவங்களையும் சாப்பிட விடாம சண்டை போட்டு அந்த இடத்தையே ரணகளம் ஆக்கிடுவாங்க.
நாம குத்துமதிப்பா உரங்களை அள்ளி நிலத்துல கொட்டும்போது, மண்ணுக்கு அடியிலயும் இதுதான் நடக்குது!
மண் டெஸ்ட்ல ஒரு சத்து இருக்குன்னு காட்டுறதுனாலயே, அதை பயிர்களால எடுத்துக்க முடியும்னு அர்த்தம் இல்ல. மண்ணுல இருக்குற சத்துக்கள் எப்பவும் தங்களுக்குள்ள பேசிட்டே இருக்கும். 1953-ல டி. வான் மல்டர் என்ற விஞ்ஞானி, இந்த சத்துக்களுக்கு நடுவுல இருக்குற ரகசிய உறவுகளை ஒரு வட்ட வரைபடமா வரைஞ்சார். அதுக்கு பேர்தான் மல்டரின் வரைபடம் (Mulder’s Chart). இந்த புரிதலை வச்சு தான் நெதர்லாந்தும், இஸ்ரேலும் விவசாயத்துல இன்னைக்கு ரொம்ப முன்னேறி இருக்காங்க.
இந்த வரைபடத்துல ரெண்டு விதமான உறவுகள் இருக்கு:
- கூட்டணி / பாசம் (Synergy 🟢): ஒரு சத்து மண்ணுல இருக்கும்போது, அது தன் நண்பனான இன்னொரு சத்தை பயிர்கள் சுலபமா உறிஞ்சுறதுக்கு உதவி செய்யும்.
- பகைமை / லாக்அவுட் (Antagonism 🔴): ஒரு சத்தை நாம அளவுக்கு அதிகமா போடும்போது, அது வாசலை மறிச்சு நின்னு தன் எதிரியான இன்னொரு சத்தை பயிர் எடுக்க விடாம மொத்தமா லாக் பண்ணிடும் (Nutrient Lockout).
உங்க காசும் போயி, பயிரும் பட்டினி கிடக்குற இந்த 'லாக்அவுட்' வலையில இருந்து எப்படி தப்பிக்கிறதுன்னு சத்துக்களின் ரகசிய கூட்டணியை வச்சு இப்ப பார்ப்போம்.
முதன்மை மூவர் (N - P - K)
1. நைட்ரஜன் (N) — இலை வளர்ப்பான்
-
நெருங்கிய நண்பர்கள் 🟢: சல்பர் (S), மாலிப்டினம் (Mo), மெக்னீசியம் (Mg).
-
காரணம்: நைட்ரஜனை செடிகள் புரோட்டீனா மாத்த சல்பர் வேணும். அதைச் செரிக்க வைக்க மாலிப்டினம் வேணும்.
-
தீவிர எதிரிகள் 🔴: பொட்டாசியம் (K), போரான் (B), காப்பர் (Cu).
-
ஆபத்து: நீங்க அளவுக்கு அதிகமா பொட்டாஷ் உரத்தை கொட்டினா, அது நைட்ரஜனை எடுக்க விடாம லாக் பண்ணிடும். அப்புறம் நீங்க எவ்வளவுதான் யூரியா போட்டாலும் பயிர் மஞ்சளாவேதான் இருக்கும்.
2. பாஸ்பரஸ் / மணிச்சத்து (P) — எனர்ஜி பேட்டரி
- நெருங்கிய நண்பர்கள் 🟢: மெக்னீசியம் (Mg), மாங்கனீசு (Mn), மாலிப்டினம் (Mo).
- தீவிர எதிரிகள் 🔴: ஜிங்க் / துத்தநாகம் (Zn), இரும்புச்சத்து (Fe), காப்பர் (Cu), கால்சியம் (Ca).
- ஆபத்து: இதுதான் தமிழ்நாட்டுல நடக்குற மிகப்பெரிய கொடுமை. நாம பாஸ்பரஸ் (DAP) உரங்களை அள்ளிப் போடும்போது, அது மண்ணுல இருக்குற ஜிங்க் மற்றும் இரும்புச்சத்தோட கெட்டியா புடிச்சுக்கிட்டு பாறை மாதிரி மாறிடும். அப்புறம் வேரால அதை உறிஞ்சவே முடியாது.
3. பொட்டாசியம் / சாம்பல்சத்து (K) — எடை மற்றும் திரட்சி
- நெருங்கிய நண்பர்கள் 🟢: மெக்னீசியம் (Mg), இரும்புச்சத்து (Fe), மாங்கனீசு (Mn).
- தீவிர எதிரிகள் 🔴: கால்சியம் (Ca), நைட்ரஜன் (N), போரான் (B).
- ஆபத்து: பொட்டாஷ் அதிகமானா, அது கால்சியத்தையும் நைட்ரஜனையும் லாக் செஞ்சிடும். இதனால தண்டு பலவீனமாகி, காய் மற்றும் பூக்கள் கொட்ட ஆரம்பிக்கும்.
இரண்டாம் நிலை மூவர்
4. கால்சியம் (Ca) — செல் சுவர் பசை
-
நெருங்கிய நண்பர்கள் 🟢: போரான் (B), மெக்னீசியம் (Mg).
-
காரணம்: போரான் இல்லாம கால்சியத்தால தாவர உடம்புக்குள்ள பயணம் செய்ய முடியாது. போரான் தான் கால்சியத்தை பழத்துக்கு, பழத்தோலுக்கு கூட்டிட்டு போற வண்டி.
-
தீவிர எதிரிகள் 🔴: பொட்டாசியம் (K), பாஸ்பரஸ் (P).
5. மெக்னீசியம் (Mg) — ஒளிச்சேர்க்கை எஞ்சின்
- நெருங்கிய நண்பர்கள் 🟢: பாஸ்பரஸ் (P), கால்சியம் (Ca).
- தீவிர எதிரிகள் 🔴: பொட்டாசியம் (K), மாங்கனீசு (Mn).
- ஆபத்து: பொட்டாசியம் அதிகமானா மெக்னீசியத்தை வேர் பக்கமே சேர்க்காது.
6. சல்பர் / கந்தகம் (S) — சுவை மற்றும் வாசனை
- நெருங்கிய நண்பர்கள் 🟢: நைட்ரஜன் (N), மெக்னீசியம் (Mg), மாலிப்டினம் (Mo).
- தீவிர எதிரிகள் 🔴: செலினியம் (Se).
நுண்ணூட்டச்சத்துக்கள் (Micronutrients)
7. இரும்புச்சத்து (Fe)
- நண்பர்கள் 🟢: காப்பர் (Cu), மாங்கனீசு (Mn), ஜிங்க் (Zn).
- எதிரிகள் 🔴: பாஸ்பரஸ் (P), கால்சியம் (Ca), மாலிப்டினம் (Mo).
- ஆபத்து: சுண்ணாம்பு சத்தோ (Calcium) அல்லது பாஸ்பரஸோ அதிகமானா இரும்புச்சத்து லாக் ஆகி இலைகள் வெளுத்துப்போகும் (Chlorosis).
8. மாங்கனீசு (Mn)
- நண்பர்கள் 🟢: இரும்புச்சத்து (Fe), ஜிங்க் (Zn), மெக்னீசியம் (Mg).
- எதிரிகள் 🔴: கால்சியம் (Ca), பாஸ்பரஸ் (P).
9. ஜிங்க் / துத்தநாகம் (Zn)
- நண்பர்கள் 🟢: மாங்கனீசு (Mn), இரும்புச்சத்து (Fe).
- எதிரிகள் 🔴: பாஸ்பரஸ் (P), கால்சியம் (Ca).
10. செம்பு / காப்பர் (Cu)
- நண்பர்கள் 🟢: ஜிங்க் (Zn), இரும்புச்சத்து (Fe).
- எதிரிகள் 🔴: மாலிப்டினம் (Mo).
11. போரான் (B)
- நண்பர்கள் 🟢: கால்சியம் (Ca), நைட்ரஜன் (N).
- எதிரிகள் 🔴: பொட்டாசியம் (K).
12. மாலிப்டினம் (Mo)
- நண்பர்கள் 🟢: நைட்ரஜன் (N), சல்பர் (S), பாஸ்பரஸ் (P).
- எதிரிகள் 🔴: காப்பர் (Cu), இரும்புச்சத்து (Fe).
நாம புரிஞ்சுக்க வேண்டிய விஷயம்:
உங்க மாமரத்துலயோ வாழைலயோ ஜிங்க் சத்துக் குறைபாடு அல்லது கால்சியம் குறைபாடு வந்தா... கடையில போய் உடனே ஜிங்க் டப்பாவையோ கால்சியம் டப்பாவையோ வாங்கி தெளிச்சா மட்டும் பத்தாது. அந்த குறைபாடு வந்ததே, போன மாசம் நீங்க அளவுக்கு அதிகமா போட்ட பாஸ்பரஸ் அல்லது பொட்டாஷ் உரத்தால தான் இருக்கும்!
சத்துக்களைத் தனித்தனியா பார்க்காதீங்க. ஊட்டச்சத்து விவசாயத்துல (Regenerative Ag), நாம மல்டரின் வரைபடத்தை வச்சு எல்லா சத்துக்களையும் ஒரு குடும்பம் மாதிரி பேலன்ஸ் செய்வோம். அப்போ தேவையில்லாத உரச்செலவு கணிசமா குறையும், பயிரும் நல்லா வளரும்!
இத நாம சரியா புரிஞ்சிக்கிட்டா, நம்ம விவசாயம் வேகமா உலக தரத்துக்கு முன்னேறிடும். இது தான் நம்ம எதிர்காலம். நியூ விவா பயோ நூட்ரீயண்ட்ஸ் இதத் தான் நம்ம ஊர்ல நடைமுறை படுத்தப் போகுது.
இன்னும் பேசுவோம்.
ரவிசங்கர் கருப்பையா 934 204 9144
எங்கள் வாட்ஸ்அப் குழுவில் இணைய, இங்கே அணுகவும் - https://chat.whatsapp.com/DtRfcPrnZykIfmavZU6kj0



