கடந்த சில தலைமுறைகளாக நாம் செய்த விவசாயம் என்ன செய்தது? மகசூல் கூடியது, சரி. ஆனால் நம் மண்ணுக்கு என்ன ஆச்சு? மண் இறந்துபோச்சு. ஊட்டச்சத்து போச்சு. ஆண்டுக்காண்டு உரம், பூச்சிமருந்து, தண்ணீர் — அதிகமாகிக்கிட்டே போகுது. செலவு கூடுது, லாபம் கூடல.
இயற்கை விவசாயம் வந்தது. "மண்ணை காப்பாத்தணும்" என்ற நோக்கம் சரிதான். ஆனால் விவசாயியின் வயிற்றுப்பாடு என்ன ஆகும்? அதற்கான தெளிவான வழி அந்த முறையிடம் இல்லை. அதனால்தான் 20-30 ஆண்டுகளாகியும், பெரும்பாலான விவசாயிகள் இன்னும் "ரிஸ்க் எடுக்கலாமா வேண்டாமா" என்று யோசிக்கிறார்கள்.
அதோட குறையை நிரப்பவே வந்தது — மறு உற்பத்தி விவசாயம் அல்லது மீளுருவாக்க விவசாயம் அல்லது ஊட்டச்சத்து விவசாயம். ஆங்கிலத்தில் Regenerative Agriculture.
இது வெறும் கொள்கை இல்ல. அறிவியல். எந்தப் பயிருக்கு, எந்தப் பருவத்தில், என்ன ஊட்டச்சத்து, எப்படி கிடைக்கணும் — இதை மண்ணில் நடக்கும் நுண்ணுயிர் அறிவியல் வைச்சே எப்படி கொடுக்கலாம். அல்லது தெளிப்பான் மூலம் எப்படி கொடுக்கலாம் அப்படிங்கர தெளிவு இருக்கு.
உடம்பு ஆரோக்கியமாக இருந்தா நோய் வராது — இந்த வார்த்தை நமக்குத் தெரியும். அதே மாதிரி, பயிர் திடமாக வளர்ந்தா, பூச்சியோ நோயோ அதை எளிதில் தாக்காது. திடமான பயிர் மண்ணையும் வேகமாக வளமாக்கும். இதற்கான அறிவியல் இப்போதே நம் கையில் இருக்கு.
நெதர்லாந்து — அமெரிக்காவை விட சின்ன நாடு, மண்ணும் நம்ம மாதிரி அவ்ளோ வளமில்ல — ஆனாலும் உலகிலேயே அதிக விவசாய ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முன்னணியில் இருக்கு. எப்படி? இந்த அறிவியல் முறையால. ரசாயனத்தை ஒரே நாளில் நிறுத்து என்று யாரும் சொல்லல. ஆனால் படிப்படியாக, உற்பத்தியை இழக்காமல், மண்ணுக்கும் உயிர்களுக்கும் கேடில்லாத வழிக்கு மாறலாம் — அதுவும் லாபகரமாக. அந்த வழியை சேர்ந்து கத்துக்கலாம் வாங்க. நன்றி.
ரவிசங்கர் கருப்பையா New ViVa Bio Nutrients 934 204 9144
எங்கள் குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யவும் - New ViVa Regen Farmers